லெபனானுக்கு அமெரிக்கா ஏவுகணை விநியோகம்!!

அமெரிக்காவினால் லேசர் வழிகாட்டி தொழிநுட்பத்துடன் கூடிய 16 மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஏவுகணைகள் லெபனான் ராணுவத்திற்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

நிலையான மற்றும் அசையாத உறுதிப்பாட்டுடன் லெபனான் ராணுவத்திற்கு தாம் இந்த ராணுவத் தளபாடங்களை விநியோகித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஒரே தனித்துவம் மிக்க சட்டப்படியான பாதுகாவலன் என்ற நோக்கில், அமெரிக்கா கடந்த 2005 ஆம் ஆண்டு தொடக்கம் லெபனானுக்கு சுமார் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை வழங்கி வந்துள்ளது.

பெரும் ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடான ஈரானின் ஆதரவுடன் செயற்படும் ஹெஸ்பொல்லா போராளிகளுக்கு எதிராக போராடும் வகையில் அமெரிக்காவின் ஆதரவு லெபனானுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இதுதொடர்பாக பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையில், தாக்குதலுக்கு அவசியமான பெருமளவான ஏவுகணைகள் அமெரிக்காவின் ராணுவ பண்ட காவி விமானம் மூலமாக எடுத்து வரப்பட்டதாகவும், ஏற்கனவே, A-29 Super Tucano தாக்குதல் விமானத்தின் மூலம் எடுத்து வரப்பட்ட தளபாடங்களின் எஞ்சிய தொகையே இன்று (புதன்கிழமை) விநியோகிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில, ஈரானிய வெளியுறவு அமைச்சர் முகம்மட் ஜவாத் ஜரிஃப் இந்த வாரம் லெபனானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தருணத்தில், லெபனானிய இராணுவத்திற்கு தனது நீண்டகால ஆதரவை வழங்கியதை மீண்டும் வலியுறுத்தினார்.

ஆனால் லெபனான் அந்த ஆதரவை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை தாம் விரும்புவதாக அவர் கூறினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.