வனவள திணைக்களம் அடாவடியும் சிங்கள மயமாக்கலும்!

மன்னாா்- நானாட்டான் பகுதியில் மக்களுக்கு சொந்தமான வயல் நிலங்களையும், குளங்களையு ம் வன பகுதி என கூறி வனவள பாதுகாப்பு திணைக்களம் தமது ஆழுகைக்குள் கொண்டுவந்திரு க்கும் நிலயில், நாடாளுமன்ற உறுப்பினா்கள் இந்த அடாத்தான செயற்பாட்டை தடுக்கவேண்டும் என நானாட்டான் மக்கள் பகிரங்க கோாிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனா்.


மன்­னார் மாவட்­டத்­தி­லுள்ள ஐந்து பிர­தேச செய­ல­கங்­க­ளில், மிகச் சிறிய பரப்­ப­ள­வைக் கொண்­ டது நானாட்­டான் பிர­தேச செய­ல­கம். அங்கு வயல்­நி­லங்­களே அதி­க­முள்­ளன. கால்­ந­டை­க­ளுக்­ கான மேய்ச்­சல் தர­வை­கள் கூட இல்லை. போர் கார­ண­மாக ஏ-14 வீதி­யால் துண்­டா­டப்­பட்டு பாது­ காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­ட­தால் அந்­தக் கிரா­மத்து மக்­கள்

அயல் கிரா­மங்­க­ளில் வாழ்ந்து வந்­த­னர். விவ­சாய நட­வ­டிக்­கை­கள் முற்­றாகப் பாதிக்­கப்­பட்­டி­ருந்­ தது. போர் முடிந்த பின்­னர் மக்­கள் மீள்­கு­டி­ய­மர்த்­தப்­பட்­ட­னர். அங்­குள்ள வயல் வரம்­பு­கள் அழிந் து காணி­களை அடை­யா­ளப்­ப­டுத்த முடி­யாத நிலை காணப்­ப­டு­கி­றது. அங்­குள்ள காணி­க­ளுக்கு வன­வ­ளத் திணைக்­க­ளத்­தி­னர் எல்­லை­களை வகுத்து வரு­கின்­ற­னர்.

எல்­லை­கள் இடப்­ப­டு­கின்ற காணி­க­ளில் கம­நல அபி­வி­ருத்­தித் திணைக்­க­ளத்­துக்­கு­ரிய சின்­னத் தேத்­தாக்­குளி, பெரிய தேத்­தாக்­குளி, வேம்­ப­டிக்­கு­ளம் என சிறு குளங்­கள் பல­வும் உள்­ள­டக்­கப்­பட்­ டுள்­ளன. ஆனால் முருங்­கன் கம­நல கேந்­தி­ர­நி­லை­யமோ அல்­லது கம­நல அபி­வி­ருத்தி உதவி ஆணை­யா­ளரோ இந்த நிலங்­களை பாது­காப்­ப­தற்கு எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை.

காணி­கள் கைய­கப்­ப­டுத்­தலை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் உடன் தடுத்து நிறுத்த வேண்­டும் என்று அந்­தப் பகுதி மக்­கள் தெரி­வித்­த­னர். அங்கு 359 ஏக்­க­ருக்­கும் மேற்­பட்ட நிலத்­தில் பயிர்ச் செய்கை இடம்­பெ­று­கி­றது. தண்­ணீர்த் தட்­டுப்­பாடு கார­ண­மாக 150 ஏக்­க­ருக்­கும் மேற்­பட்ட வயல்­ கா­ணி­கள் செய்­கை­யின்றி உள்­ளன என்­றும் அங் ­குள்ள சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.