தமிழர்கள், ஊடகங்கள்,சமூகத்தளங்கள் இருந்தும் கொலைகளை பற்றியோ, தீர்ப்பு பற்றியோ அறியாது மெளனமாக இருப்பது ஏன் ??

2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி Torontoவில் தொடர் கொலையாளி (Canadian serial killer) Bruce McArthur க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது வெளியில் வரமுடியாத தண்டனையாக 25 அல்லது 50 ஆண்டுகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 


அதன் பின்னர் அவரது நண்பரான திரு பிரணவன் தங்கவேல் நிருபர்களிடம் பேசுகையில்..

 தனது நண்பன் கொல்லப்பட்ட கிருஷ்ணகுமார் MV Sun Sea கப்பலில் கனடாவிற்க்கு வந்தவர். அவருக்கு இன்றுவரை வதிவிட அனுமதியில்லை. இங்கு தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்தவர். நற்குணங்களை கொண்டவர். எப்படி இந்த தொடர் கொலையாளியுடன் தொடர்வுப்பட்டார் என்பது தெரியவில்லை அதை அறியும் முயற்சியில் இருப்பதாக கூறியுள்ளார். கனேடிய தொடர் கொலையாளி Bruce McArthur 8 பேர்ரை தொடராக கொலைசெய்துள்ளான். 

அதில் இருவர் தமிழர்கள் முதலில் கொல்லப்பட்டவரும் தமிழர் என்பது குறிப்பிடதக்கது. கொல்லப்பட்டவர்கள் ஓரினசேர்க்கையாளர்கள் என அடையாளப் படுத்தப்படுகிறது. ஆனால் கிருஷ்ணகுமார் அப்படிப்பட்டவர் அல்ல' எதனால் இந்த தொடரில் இணைக்கப்பட்டார் என்பது அறியமுடியாது இருப்பதாக உறவினர்கள் கருத்து. Bruce McArthur 91வயது 25 வருடங்கள் கடூழிய சிறை என்றால் 116 வயது முதிர்ந்ததாக இருக்கும் அல்லது மேலும் 25 வருடங்கள் இருக்கும்.


எவ்வளவோ
தமிழர்கள், ஊடகங்கள்,சமூகத்தளங்கள் இருக்கின்றன இருந்தும் இந்த கொலைகளை பற்றியோ, தீர்ப்பு பற்றியோ அறியாது மெளனமாக இருப்பது ஏன் ??  

எங்களை பற்றி அறிவதற்கு கூட வெளிநாட்டு ஊடகவியலாளரை நம்பி இருக்க வேண்டியிருக்கிறது.. மிகவும் மோசமானது.
- சந்திரகாந்-

No comments

Powered by Blogger.