அமெரிக்காவின் நியூயார்க்கில் பிரியங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை!
இந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக வலம் வரும் பிரியங்கா சோப்ராவுக்கு அமெரிக்காவின் மேடம் துஸ்ஸாத் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.
லண்டனை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் மேடம் துஸ்ஸாத் அருங்காட்சியகத்திற்கு, லண்டன் தவிர்த்து பல இடங்களிலும் அருங்காட்சியகங்கள் உள்ளன. இதில் வரலாற்று சிறப்பு மற்றும் பிரபலங்களுக்கு சிலைகளை வைக்கப்படுவது தனிச் சிறப்பாக கருதப்படுகிறது.
அந்த வகையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மேடம் துஸ்ஸாத் அருங்காட்சியகத்தில் முன்னாள் உலக அழகியும், உலக சினிமா நட்சத்திரமுமாக வலம் வரும் பிரியங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு அவர் ஒரு விருது விழாவில் கலந்து கொண்டபோது அணிந்திருந்த சிவப்பு நிற உடையில் அந்த மெழுகு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனஸ், நிச்சயதார்த்தத்தின் போது பரிசளித்த வைர மோதிரம் போன்ற ஒரு மோதிரமும் அந்த மெழுகு சிலைக்கு அணிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை பார்வையிட்டு மகிழ்ந்த பிரியங்கா சோப்ரா, தனது சமூக வலைத்தளத்தில், லண்டன் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகங்களிலும் கூட என்னுடைய மெழுகு சிலை விரைவில் வைக்கப்பட உள்ளது என்ற தகவலை தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை