கூட்டமைப்புக்கு, கால அவகாசம் கேட்பதற்கு அதிகாரம் கொடுத்தது யாா்..?
இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வு தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் செயலகம் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த விடயம் தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், இடமாற்றங்கள் பதவி உயர்வுகளுக்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதுவரையில் ஆளுநரை சந்திக்க சமூகமளிக்க வேண்டாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக வழங்கப்படாமல் இருந்த சகல பதவியுர்வுகள், ஆசிரிய இடமாற்றங்கள் தொடர்பாக ஏப்ரல் மாதம் 15ஆம் திகதிக்கு முன்பு வழங்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் அதற்கு முன்னர் ஆளுநர் செயலகத்திற்கு வந்து நேரத்தையும், பணத்தையும் செலவு செய்து வீணடிக்க வேண்டாம் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதிக்கு முதல் இடமாற்றங்கள், பதவியுயர்வுகள் இடம்பெறாத பட்சத்தில் மாத்திரம் அது தொடர்பாக சந்தித்து கலந்துரையாட முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த விடயம் தவிர்த்து ஏனைய பொது விடயங்கள் தொடர்பாக ஆளுநரை சந்தித்து தங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.
ஆளுநர் செயலகத்தில் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் பொதுமக்கள் சந்திப்பு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை