'வர்மா' படத்திற்கு புதிய தலைப்பு; படக்குழு பற்றிய முழு விபரம் வெளியீடு!

மீண்டும் தயாராகும் ‘வர்மா’ படத்திற்கு புதிய படக்குழு மற்றும் புதிய தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மீண்டும் தயாராகும் இந்த படத்தில் த்ருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார்.த்ருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகும் அர்ஜுன் ரெட்டி தமிழ் ரிமேக்கிற்கு, புதிய தலைப்பு மற்றும் படக்குழு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனுடன் படத்திற்கான முதல் பார்வை போஸ்டரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


தெலுங்கு சினிமாவில், கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டித்த திரைப்படம் ’அர்ஜுன் ரெட்டி’. விஜய் தேவரகொண்டா, பூனம் பாண்டே ஆகியோர் நடித்திருந்த இப்படம் தமிழகத்திலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கடந்தாண்டு, இப்படத்தை தமிழில் மறுவாக்கம் செய்யவுள்ளதாக ‘இ4 எண்டெயிர்மென்ட்’ நிறுவனம் அறிவித்தது. அதன்படி, படத்தை பாலா இயக்குவதாகவும், அதில் நடிகர் விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.