வடக்கு இளைஞர்களை குறிவைக்கிறார் கோட்டா!
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வடக்கு, கிழக்கிலுள்ள இளைஞர்கள் சிலரை கொழும்புக்கு அழைத்து பேச்சு நடத்தியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளிச்சம் என்ற அமைப்பின் செயற்பாடுகளை இவ்விரு மாகாணங்களிலும் தீவிரமாக முன்னெடுப்பதற்கான செயல் திட்டங்கள் குறித்தே இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
இதன்படி அடுத்த மாதத்துக்குள் மாவட்ட இணைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், தொகுதி மட்டத்திலான செயற்பாட்டாளர்களுக்கான நியமனமும் வழங்கப்படவுள்ளது.
புதிய அரசியலமைப்பு, ஜனாதிபதித் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பிலும் மேற்படி சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.
மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவே களமிறக்கப்படவேண்டும் என பங்காளிக்கட்சிகளும், கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளும் வலியுறுத்திவருகின்றன.
ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து கோட்டாபய ராஜபக்ஷவும் செயற்பாட்டு அரசியலில் இறங்கியுள்ளார். இந்நிலையிலேயே, வடக்கு, கிழக்கு மாகாணங்களையும் கோட்டா குறிவைத்து தற்போது காய் நகர்த்தி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை