தமிங்கிலம், தங்கிலீசான தமிழ்..!


(-த.செல்வா-)
தமிழ்+ஆங்கிலம்-தமிங்கிலம்
தமிழ்+இங்கிலீஸ்-தங்கிலீஸ்

என்ற நிலைக்குத் தமிழைக் கொண்டுவந்த நாம் எப்படித் தமிழ் மொழியைப் பற்றிப் பேசமுடியும்?
 தமிழ் வாழ்க என்று வாழ்த்த முடியும்?

இரண்டாயிரம் வருடங்களல்ல
இருபது ஆயிரம் வருடங்களையும் கடந்த ஆதிப் புகழ் தமிழ் மொழிக்கே உண்டு
ஆனால் அந்த மொழியை அழிக்கும் முதல் எதிரி தமிழனாக இருப்பது வேதனையும் வெட்கமும் நிறைந்த ஒன்றே

ஆங்கிலம் 14மேற்பட்ட மொழிகள் கலந்து உருவெடுத்தது அதில் தமிழும் ஒன்றே ஆனால் அது வல்லமை மிக்க மொழியாக வந்தும் தமிழ் வல்லமை இழந்த மொழியாகப் போவதற்கும் காரணமென்ன தமிங்கில தங்கிலீஸ் மயக்கமேஆகும்

சமூக வலைத் தளங்களைத் திறந்து பார்த்தால் கப்பி வேவி/கப்பி மம்மி /சுவீற் டார்லிங் என ஏராளம் தங்கிலீசுகளாகக் கொட்டிக் கிடக்கின்றது

வெளிநாட்டில் படிக்கும்ஒரு நண்பனின் வீடியோ பார்த்தேன் அவர் அதில் தன்னைத் தானே ஆங்கிலத்தில் அறிமுகப் படுத்துகிறார் புறம்சிறீலங்கா எனக் கூறிச் சிரிக்கிறார் அவர் ஒரு தமிழன் அவரின் பெயரும் தமிழ்
நாடுமட்டும் எப்படிச் சிங்களமானது
எனத் தெரியவில்லை வெளிநாட்டில் பலர் புறம் சிறீலங்கா என்றே சொல்கிறார்கள்
புறம் ஈழம் அல்லது இலங்கை என்று ஏன் இவர்கள் சொல்வதில்லை?

சிறீலங்கா தமிழ்ச் சொல் அல்ல ஈழம் என்பதே தமிழ்ச் சொல் காரணம் ஈழத் தமிழ் ராணி ஆட்சி செய்த நாடு என்பதால் பல்கலைக் கழகங்களில் படிப்பவர்களே அரைவேக்காட்டுத் தனத்துடன் சிங்களம் கலந்த தமிழைக் குழைத்து தமிழை அழித்தால் சாதாரண பாமரர் என்ன செய்வர்

என்னைப் பொறுத்த அளவில் சாதாரண பாமர மக்களால் தான் தமிழ் இன்றுவரை வாழ்கிறது கொஞ்சம் படித்தவர்கள் காசுக்காரர் வெளிநாட்டுக்காரர் எனக் கருதி அதனால் தமக்குத் தாமே முடிசூட்டி மகிழும் முட்டாள்ச் சமூகத்தினரே

சிங்களம் ஆங்கிலம் கலந்த தமிழை உச்சரிக்கின்றனர் அதனால் தாம் நாகரீகம் தெரிந்தவரெனவும் தம்மை மற்றவர் தூக்கிவைத்துக் காவடி எடுப்பவர் எனக் கனவு காண்கின்றனர் இதனால் தமிழ் அபாய. நிலையை எட்டியுள்ளது

இங்கே ஈழத்து நடிகை என சிலர் திரிகிறார்கள்  எங்கேனும் குறுப்பட வெளியீட்டுக்கு முன்னர் சமூக வலைத் தளங்களில் தலையை விரித்து விட்டு ஒன்றுக்கு நூறு' காய் ' போடுவார்கள் மற்றவர்களைக் கவருவதாய் நினைத்து றிலீஸ் விசி நைஸ் வாவ் ஓபிணிங் தாங்யூ என தமிங்கிலத்தில் பிதற்றுவார்கள் இதனால் தமிழும் பாவம் ஆங்கிலமும் பாவம்

'ஸ்' என்பது எமது எழுத்தல்ல இன்று பெயர் கொஞ்சம் எடுப்பாக இருப்பதற்காய் ஆகாஸ் அஸ்வத் அஸ்மின் ஆஸ்மி இப்படியான தமிழல்லாத பெயர்களை குழந்தைக்கு சூட்டுகின்றனர்

விடுதலைப் புலிகள் காலத்தில் நிலத்திற்காக மட்டும் போரிடவில்லை மொழிக்காகவுமே போராடினார்கள் தமிழ் நிலா ,தமிழ் நிலவன், தமிழ்ச் சுடர், தமிழ் மகள் ,எனத் தமிழ்ப் பெயர்களால் தமிழ்க் குழந்தைகளோடு தமிழும் வளர்ந்தது

இன்று பெயரும் வைப்பதில்லை வைத்த பெயர்களையும் அநாகரீகரென எள்ளி நகை யாடுகிறோம் இதனால்தான் அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து மீண்ட ஒரு யப்பானியன் போல்
 ஈழத்தவனால் மீள முடியவில்லை

நிலத்துக்கும் கடலுக்கும் உரிமைக்குமாகப் போரிடும் நாம் தாய் மொழிக்காகப் போரிடாததே நமது அழிவுக்குக் காரணம் என்பதை உதாசீனப் படுத்துகிறோம்

1956இல் உருவெடுத்த தனிச் சிங்களச் சட்டம்
இன்று வரை தமிழனை ஒரு புற்றுநோய்க் கிருமியாகக் கொன்று தின்கிறது

அந்தப் புற்றுநோய்க் மருந்து காணாததன் விளைவே இன்று ஏக்கிய ராஜ்ய வார்த்தை மயக்கம் இந்த மயக்கம் மீண்டும் பெரு நெருப்பாகி எரியும் என்ற அச்சம் மெல்ல மெல்ல மேலெழத் தொடங்குகின்றது

எனவே தமிழைத் தமிழாக வாழ விடாது நாகரீகமென்ற முட்டாள்மோகத்தால் தமிங்கிலமாக்கி தங்கிலீஸ் பேசுவோர் இனியாவது திருந்தினால் தமிழ் வாழும் தமிழனும் வாழ்வான்

மம்மி இல்லை அம்மா
மம் இல்லை அம்மா
டாடி இல்லை அப்பா
டடா இல்லை அப்பா என்று அறைவோம் தமிழ் முரசை

No comments

Powered by Blogger.