பொன்னாலையில் இலவச கண் பரிசோதனையும் கண்ணாடி வழங்கலும்!

கண்பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் பரிசோதனையும் இலவசமாக கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வும் பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் இடம்பெறவுள்ளது.
கொழும்பு தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் திரு.க.தளையரட்ணம் அவர்களால் இந்த இந்தச் செயற்பாடு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
கண் பார்வைக் குறைபாடு உடையவர்கள் எவரும் அன்றைய தினம் வருகைதந்து பரிசோதனைகளை மேற்கொண்டு கண்ணாடிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் திரு.க.மனோகர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை