பொலனறுவையில் பாரிய ஆர்ப்பாட்டம்!!

அபயபுர மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு வலியுறுத்தி பொலனறுவையில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொலனறுவை- சோமாவதிய பிரதான வீதியை முற்றாக மறித்து இன்று (வெள்ளிக்கிழமை) இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 3 மணிநேரம் வரை நீடித்த ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பிரதான வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டதுடன், பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.
இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்த பொலிஸார், பொலனறுவை வலயக் கல்விப் பணிப்பாளருடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர். இதன்போது, குறித்த பாடசாலைக்கு கூடிய விரைவில் ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக வலயக் கல்விப் பணிப்பாளர் உறுதியளித்துள்ளார்.
இதனையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த பகுதியிலிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.