வெனிசுவேலா படையினர் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு 15 பேர் காயம்!


பிரேசில் எல்லையில் வெனிசுவேலா படையினர் நடத்திய தாக்குதலில் பொது மக்கள் இருவர் உயிரிழந்ததுடன், 15 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளிலிருந்து மனிதாபிமான உதவிகளைப்பெற எதிர்க்கட்சி முயற்சித்து வருகின்ற நிலையில் கரிபியன் தீவுகளுடனான கடல் எல்லையை வெனிசுவேலா மூடியுள்ளது. இந்நிலையில் அந்நாட்டு துருப்புக்களின் வாகன தொடரணி பிரேசில் எல்லை பகுதியால் சென்றது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் நிவாரண பொருட்களை கொண்டுவருவதற்கு தடை விதிக்கும் முகமாக படைகள் செல்வதாக எண்ணி அதனை தடுக்க முயற்சி செய்துள்ளனர். இதில் படைகளால் துப்பாக்கிச் சூடு நடத்த இருவர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 15 பேரும் அம்பியூலன்ஸ் உதவியுடன் ரோரைய்மா பொது மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.