எவரெஸ்ட் சுற்றுலாவுக்குத் தடைவிதித்த சீனா!!
``நாங்கள் பலமுறை வீரர்களுக்கு எவரெஸ்ட் மலை ஏற உதவியிருக்கிறோம். அவர்கள் கொண்டு வரும் பொருள்களை மலையில் விட்டுவிட்டு வரும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.’’
உலகின் மிக உயரமான சிகரம் எவரெஸ்ட். இந்திய, நேபாள, சீன எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. மொத்தமாக 29,029 அடி உயரம் கொண்டது. எவரெஸ்ட் உலகின் உயரமான சிகரம் என்பதாலும், சவாலான பயணம் என்பதாலும் பல்வேறு மலை ஏறும் வீரர்கள் இங்கு வந்து சாதனை படைத்துச் செல்கின்றனர். அவ்வாறு பயணம் மேற்கொள்ளும் வீரர்கள் தங்களுடன் கொண்டுவரும் பொருள்களை அங்கேயே விட்டுச் செல்வதால், எவரெஸ்ட் சிகரமே குப்பைக் காடாக மாறியுள்ளது. அவ்வப்போது மலையேறும் வீரர்களும் தாங்கள் கண்ட காட்சிகளை, வருத்தத்துடன் பகிர்ந்துகொள்வதும் நிகழ்வதுண்டு. இந்த நிலையில்தான் ஆண்டுதோறும் நாளுக்கு நாள் குப்பைகள் அதிகரித்துக் குவிந்து வருவதாக சாகர்மாதா மாசுக் கட்டுப்பாட்டுக் குழு தெரிவித்திருக்கிறது.
மலையேறும் வீரர்கள் கொண்டு செல்லும் உணவுப் பொருள்களில் மீதமாகும் உணவுகள், கூடாரங்கள், காலி கேஸ் சிலிண்டர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், மனித உடல் கழிவுகள் போன்றவற்றால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எவரெஸ்ட் சிகரம் குப்பைகளால் சூழ்ந்துள்ளதால் இது உயரமான குப்பை மேடாகக் காட்சியளிப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு நிகழ்வும் நடந்திருக்கிறது. சீனாவில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்திலிருக்கும் முகாம் பகுதிக்கு ஒவ்வோர் ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். இந்த அடிவாரப் பகுதியில் இருந்து எவரெஸ்ட் மலையை ரசிப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதனால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சில நாள்கள் தங்கியிருந்து செல்கின்றனர். அப்போது அவர்கள் பயன்படுத்தும் பொருள்கள் போக மீதப் பொருள்களை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுவிடுகின்றனர்.
இப்போது இந்த இடத்துக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதித்திருக்கிறது சீனா. இப்போது சில மலையேறுபவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதால் குப்பைகள் மலைபோல தேங்கியிருப்பதாகக் காரணம் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் அங்கே மலை போன்று குவிந்திருக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தும் வரை சுற்றுலாப் பயணிகள் போக முடியாது.
கடந்த டிசம்பர் மாதம் இந்த முடிவு அதிகாரபூர்வமாக எடுக்கப்பட்டாலும், கடந்த சில நாள்களுக்கு முன்னர்தான் மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவரெஸ்ட் மலைப்பகுதி நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது என்று முதலில் வதந்தி பரவியது. பின்னர், அது தற்காலிகமாகத்தான் மூடப்பட்டிருக்கிறது என அதிகாரிகளால் செய்தி வெளியிடப்பட்டது. அதன் பின்னரே சுற்றுலாச் செல்வோர் நிம்மதியடைந்தனர். சில மலையேறுபவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும், அவர்கள் கடுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்ற அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி சீன அதிகாரிகள் பேசும்போது, ``ஒவ்வொரு வருடமும் 300 மலையேறும் வீரர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படுகிறது. ஆனால், எவரெஸ்ட் மலையைப் பார்வையிட விரும்பும் மக்கள் அதிகமாக அடிப்பகுதியில் சென்று முகாமிடுகின்றனர். அதனால் அப்பகுதியில் அதிகமாகக் குப்பைகள் சேர்ந்து விடுகின்றன. இப்போது சுற்றுலாப் பயணிகள் 16,400 அடி உயரமுள்ள அடிவார முகாமுக்குச் செல்வதற்குத்தான் தடை இருக்கிறது. ஆனால், அதன் அடிவாரப்பகுதியான ரோங்பக் மடாலயத்திலிருந்து (Rongbuk Monastery) எவரெஸ்ட் சிகரத்தை முழுமையாகக் கண்டு ரசிக்கலாம். இது தற்காலிகமானதுதான்’’ என்கிறார்கள்.
எவரெஸ்ட் உச்சியை அடைய பல வழிகள் இருந்தாலும், சீனாவின் வழியே மலையேறுவது கொஞ்சம் சிரமமான காரியம். நேபாளத்தில் இதுவரை 5,000 பேர் எவரெஸ்ட் உச்சிக்குச் சென்றிருக்கிறார்கள். ஆனால், சீனாவிலிருந்து 3,000 பேர் வரை மட்டுமே மலை உச்சியை அடைந்திருக்கிறார்கள். சீனாவின் முகாமானது கார் மூலம் செல்லக்கூடிய வழிகளைக் கொண்டிருப்பதால் பிரபலமான சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது. குறிப்பாக, உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகை தருகின்றனர். 2014-ம் ஆண்டில் 59,000 பார்வையாளர்களும் 2015-ல் 40,000 பேரும் பார்வையிட்டுள்ளனர். நேபாளத்தின் பகுதிக்குச் செல்ல பல மைல் தூரங்கள் கால்நடையாக நடக்க வேண்டும். அதனால் ஒவ்வொரு வருடமும் இப்பகுதிக்கும் ஆட்கள் அதிகமாகப் பயணம் மேற்கொள்கின்றனர்.
சீனாவின் முகாமுக்குச் செல்லும் மக்கள் உபயோகிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடுகின்றனர். இதனால் மலை வளமும், அதில் இருந்து உருவாகும் ஆறும் அதிகமாகப் பாதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தப் பகுதியில் மட்டும் 9 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவிக்கிறார்கள் அதிகாரிகள்.
Pc- www.rte.ie
இதுபற்றி மலையேறும் வழிகாட்டிகள் தரப்பில், ``நாங்கள் பலமுறை பல வீரர்களுக்கு மலை ஏற உதவி செய்திருக்கிறோம். ஆனால், அவர்கள் கொண்டுவரும் பொருள்கள் மற்றும் கழிவுகளைச் சிகரத்தில் பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. சுற்றுலா வருவோரும் குப்பைக் கழிவுகளை இங்கேயே விட்டுவிட்டுச் சென்றுவிடுகின்றனர். அதனால் இப்பகுதியில் குப்பைகள் அதிகமாக நிரம்பி வழிகின்றன’’ என்கிறார்கள்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்களும், லஞ்சம் வாங்கிக்கொண்டு எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும், மழைக்காலத்தில் இவை அடித்து வரப்பட்டு ஆறுகளில் கலந்து சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துவதாகவும் சூழலியலாளர்கள் தரப்பில் குப்பைகள் சேர்வதற்குக் காரணம் சொல்லப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை