கிழக்கில் உல்லாசப் பயணத்துறையை மேம்படுத்த புதிய செயற்திட்டங்கள்!!
கிழக்கு மாகாணத்தில் உல்லாசப் பயணத்துறையை ஊக்குவிப்பதற்காக பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பான கலந்துரையாடல் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் மட்டக்களப்பு ஆளுநர் அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே ஆளுநர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த உல்லாசப் பயணிகளை இலக்காகக் கொண்டு பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
விசேடமாக இவ்வாண்டு பாசிக்குடா, தொப்பிகல, மற்றும் மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கு ஆகிய பிரதேசங்களை மையப்படுத்தி இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மட்டக்களப்பின் இயற்கையினை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் இவ்விடயம் தொடர்பான விளம்பரங்களை ஐரோப்பிய நாடுகளில் வழங்கும் வகையிலும் விஷேட ஏற்பாடுகள் இடம் பெறவுள்ளன.
இத்திட்டத்திற்கு சகல திணைக்களங்களும் தமது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்” என கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை