மிக் விமானக் கொள்வனவில் ஊழல் இல்லை: கோட்டா!!
எதிர்த்தரப்பினர் குறிப்பிடுவதுபோல் மிக் விமானக் கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் எந்தவிதமான ஊழலும் இடம்பெறவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் தான் இலங்கை, இராணுவ வரலாற்றிலேயே வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்ற கொடுக்கல் வாங்கலாகக் கருதப்படுகிறது.
நாட்டின் அப்போதைய நிலைமையில் இவ்வாறானதொரு போர் விமானம் தேவை என விமானப்படையினர் தான் கோரியினார்கள். எமது அரசாங்கத்திடம் மட்டுமல்லாது, எமக்கு முன்னர் சிறிது காலம் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்திடமும் அவர்கள் கோரியிருந்தார்கள்.
எனினும், சமாதானப் பேச்சுக்கள் இடம்பெற்றமையால் அது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியாது போய்விட்டது.
பின்னர்,நாம் வந்தவுடன் இதுதொடர்பில் ஆராய்ந்து பார்த்தோம். எந்த வகையான விமானம் வேண்டும் என்பதையும் விமானப்படையினர் தான் எமக்கு கூறினார்கள். நாமல்ல.
இந்த விமானங்களை கொள்வனவு செய்வதற்காக, இவை தொழில்நுட்ப ரீதியாக எவ்வாறான நிலையில் இருக்கின்றன என்பதை ஆராயவும் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இதனையடுத்து, விமானங்களின் விலையை நிர்ணயிப்பதற்கும் அமைச்சரவையினால் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டது. விலைகள் நிர்ணயிக்கப்பட்டவுடன், இதனை குறைப்பதற்காகவும் ஒரு குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவின் தலைவர் தான் தற்போதுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றின் உறுப்பினராகவும் இருக்கிறார்.
இவ்வாறு, நாம் ஒரு கட்டமைப்புடன்தான் இந்த விமானங்களை கொள்வனவு செய்தோம். இவ்வாறுதான் நாம் அனைத்து ஆயுதங்களையும் கொள்வனவு செய்தோம்” என கோட்டாபய ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை