48 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்குள் புகுந்த இந்திய வான்படை’ !!
பாகிஸ்தானின் எல்லை தாண்டி இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு வீசியதில் முஸாஃபராபாத் பாலகோட், சாக்கோதி பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன.
12 மிராஜ் ரக விமாகங்கள் 1,000 கிலோ வெடிகுண்டுகள் வீசின. பாகிஸ்தானுக்குள் 50 கிலோ மீட்டர் தொலைவில் ஹைபர் பக்துவ்னா மாகாணத்தில் உள்ள பாலகோட் மீது தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தான் அதிர்ந்துபோயுள்ளது.
தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா ஹிஸ்புல் முகாஜீதின் அமைப்புகள் அழிந்துபோனதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிகாலை 3.45 மணிக்கு முஸாஃபராபாத் 3.48 மணிக்கு பாலகோட், 3.58 மணிக்கு சக்கோதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 1971-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியா எல்லை தாண்டி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியதில்லை. 1999 கார்கில் போரின்போதுகூட இந்திய எல்லைக்குள் இருந்த பாகிஸ்தான் வீரர்கள்மீது வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டதே தவிர பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்கியதில்லை. பிப்ரவரி 14-ம் தேதி சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு இந்திய விமானப்படை திட்டமிட்டது எப்படி?
பிப்ரவரி 15
விமானப்படை தளபதி பிரேந்திர சிங் தோவானிடம் மத்திய அரசு தாக்குதல் திட்டம் குறித்து அறிக்கை கேட்கிறது.
பிப்ரவரி 16 - 20
இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் தாக்க வேண்டிய இடங்களைத் தீர்மானிக்கிறது.
பிப்ரவரி 20 - 22
தாக்குதல் நடத்தப்பட வேண்டிய இடங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டன.
பிப்ரவரி 21
தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இறுதி முடிவு எடுக்கும் கூட்டத்தில் பங்கேற்றார்.
பிப்ரவரி 22
குவாலியரில் உள்ள ஐ.ஏ.எஃப்-1 ஸ்குவாட்ரான் டைகர் பிரிவு மற்றும் ஸ்குவாட்ரான் 7-ஐ சேர்ந்த Battle Axes பிரிவு விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. இந்தியாவிலேயே மிகப் பழைமையான ஸ்குவாட்ரான்கள் இவை. `வானத்தின் புலிகள்’ என்பது இந்த ஸ்குவாட்ரானின் செல்லப் பெயர். மிராஜ் ரக விமானங்கள்தான் இந்த ஸ்குவாட்ரானின் தாக்குதல் விமானங்கள்... தாக்குதலில் ஈடுபட 12 விமானங்கள் தேர்வு செய்யப்பட்டன.
பிப்ரவரி 24
ஆக்ராவிலிருந்து வந்த வானத்தில் எரிபொருள் நிரப்பும் விமானத்துடன் இணைந்து ஒத்திகை பார்க்கப்பட்டது.
பிப்ரவரி 25 - 26
மிராஜ் விமானங்களில் இஸ்ரேல் தயாரிப்பான லேசர் கதிர் வழியாக இயங்கும் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டன. IAF Heron surveillance ட்ரோன் எல்லை பகுதியில் ரகசிய இடத்துக்குக் கொண்டு வரப்பட்டது. விமானிகள் இலக்குகளை மீண்டும் ஒருமுறை கடைசியாக சோதித்துப் பார்த்துக்கொண்டனர். இறுதி உத்தரவு கிடைத்ததும் 10 நிமிடத்தில் தீவிரவாதிகளை முடித்துவிட்டு மீண்டும் பத்திரமாக தாய்நாட்டுக்குள் வந்திறங்கின இந்திய விமானங்கள்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை