எகிப்து தலைநகரில் அரஃபாத் அமைச்சர் பதவி ராஜினாமா!
எகிப்து தலைநகர் கெய்ரோவிலுள்ள பிரதான ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தை அடுத்து போக்குவரத்து அமைச்சர் ஹிஷாம் அரஃபாத் ராஜினாமா செய்துள்ளார்.
ரயில் எஞ்சின் தடுப்பொன்றில் மோதியதில் இன்று (புதன்கிழமை) குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, ரயில் நிலையத்தில் பாரிய வெடிப்பு சம்பவத்துடன், தீ பரவியுள்ளது.
குறித்த அனர்த்தத்தில் 50 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இந்நிலையில் மீட்கப்பட்ட பல உடல்களை அடையாளம் காண முடியவில்லை என்றும் மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 15 பேர் சிகிச்சைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் ஹலா சயட் தெரிவித்துள்ளார்.
மேலும் விபத்து திட்டமிட்ட சம்பவம் என்று எந்த ஆதாரமும் இல்லை என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, கடந்த 2017ஆம் ஆண்டு இரு பயணிகள் பேருந்து ஒன்றுடனொன்று மோதி விபத்திற்குள்ளானதில் 43 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 100இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை