தேர்தல் வெற்றிக்காக மக்கள் மீது யுத்தத்தை திணிக்கும் இந்திய பிரதமர் மோடி!!

இந்திய பாகிஸ்தான் எல்லையில் போர் பதட்டம் உருவாகியுள்ளது.

தனது தேர்தல் வெற்றிக்காக இந்திய பிரதமர் மோடி மக்கள் மீது யுத்தத்தை திணிக்க முயல்கிறார்.

ஆதாரங்களை தந்தால் தீவிரவாதிகளை கைது செய்ய பாகிஸ்தான் உதவும் என்று பிரதமர் இம்ரான்கான் கூறியிருந்த நிலையில் எல்லை தாண்டிச் சென்று இந்தியா குண்டு போட்டுள்ளது.

சர்வதேச சட்டத்தை மதிக்காமல் குண்டு போட்ட இந்தியா தனது விமானி பிடிபட்டவுடன் சர்வதேச சட்டப்படி தமது விமானி நடத்தப்பட வேண்டும் என்று கோருகின்றது.

அதுமட்டுமல்ல தமது 40 ராணுவத்தினர் கொன்றதற்காக 400 தீவிரவாதிகளை குண்டு போட்டு அழித்துள்ளதாக இந்தியா கூறுகின்றது.

நாம் எத்தனையோ வகை குண்டுகளை பற்றி அறிந்திருக்கிறோம். ஆனால் சரியாக 400 பேரை அதுவும் தீவிரவாதிகளை மட்டும்  கொல்லக்கூடிய குண்டை இப்போதுதான் அறிகிறோம்(?)

இந்தியா கூறுவது எந்தளவு உண்மையாக இருக்கும் என்பதை ஈழத் தமிழர்களாகிய நாம் நன்கு அறிவோம்.

யாழ்ப்பாண மருத்துவமனையில் இருந்த நோயாளிகளையும் மருத்துவர்களையும் கொன்றுவிட்டு அத்தனை பேரும் புலிகள் என்று கூறியவர்கள் அல்லவா இந்திய ராணுவம்.

அதுமட்டுமல்ல நெல்லியடியில் பலரும் அறிந்த மனநோயாளி பத்மநாதனை கொன்றுவிட்டு புலிகளின் மிகப்பெரிய தளபதியை கொன்றதாக அறிவித்தவர்கள் அல்லவா இந்திய ராணுவம்.

இப்போதும்கூட முதலில் தமது விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்று கூறிய இந்திய அமைச்சர்  பாகிஸ்தான் பிடிபட்ட இந்திய விமானியைக் காட்டியவுடன் ஒத்துக்கொள்கின்றார்.

மோடியின் வெற்றிக்காக இன்னும் என்னென்ன பொய்கள் கூறப்படப் போகின்றனவோ தெரியவில்லை?
(- பாலா-)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.