`பசிக்குது, ஒரு பிஸ்கட் பாக்கெட் கிடைக்குமா சார்?!' - கலங்கடித்த மாற்றுத்திறனாளி மாணவியின் குரல்!!

தஞ்சாவூரில் நடைபெற்ற அதிமுக அரசின் ஈராண்டு சாதனைகள் விளக்க புகைப்படக் கண்காட்சிக்கு பார்வைக் குறைபாடுடைய அரசுப் பள்ளி மாற்றுத் திறனாளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர்.
அமைச்சர் துரைக்கண்ணு வருவதற்கு தாமதமானதால் அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியது பார்ப்பவர்களை வேதனையில் ஆழ்த்தியது.

அழைத்து வரப்பட்ட கண்காட்சிக்கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் அதிமுக அரசின் ஈராண்டு சாதனைகளை விளக்கி புகைப்படக் கண்காட்சி  நடைபெற்றது. செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் அ.தி.மு.க அரசால் கொண்டுவரப்பட்டத் திட்டங்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்த திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இந்தக் கண்காட்சியில் வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு, கலெக்டர் அண்ணாதுரை, மாநிலங்களவை எம்.பி வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமைச்சர் துரைக்கண்ணு இந்த கண்காட்சியை திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

காலை பத்து மணிக்கு நிகழ்ச்சி துவக்கி வைக்கப்படும் என கூறி  பார்வை குறையுடையோருக்கான அரசுப் பள்ளி மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் 17 பேர் அழைத்து வரப்பட்டனர். காலை 8 மணிக்கு அவர்கள் பள்ளியில் டிபன் சாப்பிட்ட வைத்து 9 மணிக்கெல்லாம் விழா நடக்கும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ஆனால், அமைச்சர் துரைக்கண்ணு தொடங்கி அனைவருமே வருவதற்கு தாமதமானது. ஒரு பக்கம் அதிமுக அரசின் புகழை எடுத்து சொல்லும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டிருந்தது. நேரம் போனதே தவிர நிகழ்ச்சி தொடங்கியபாடில்லை.மாற்று திறனாளி மாணவர்கள் இயற்கை உபாதைகள் கழிக்க கூட முடியாமல் தவித்தனர். வெயில் வேறு வாட்டியதால் அவர்களால் தாக்கு பிடிக்கப் முடியவில்லை.

11 மணியை தாண்டியதும் மாணவி ஒருவர், `சார் அவசராம கிளம்பி வர சொன்னதால் யாரும் சரியா சாப்பிடலை ரொம்ப பசிக்குது ஒரு பிஸ்கட் பாக்கெட் கிடைக்குமா சார்’ என பரிதாபமாக கேட்டார். உடனே, `இதோ அமைச்சர் வந்திடுவார். உடனே கிளம்பி விடலாம்’ என கூறி அவர்களை சமாதானம் செய்தனர். மேலும், அவர்கள் நன்கு சோர்ந்துவிட்டதை அறிந்த அதிகாரிகள் அவர்களுக்கு பிஸ்கட் பாக்கெட் ஒன்றும் கூல்டிரிங்க்ஸ் பாட்டில் ஒன்றும் வாங்கி கொடுத்து சாப்பிட வைத்தனர். இந்நிலையில் காலை 11.20 மணிக்கு வந்த அமைச்சருடன் அனைவரும் வந்தனர். பின்னர் கண்காட்சியை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். பின்னர், காத்திருந்த மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 17 பேருக்கு 98,500 ரூபாய் மதிப்பீட்டில் தையல் இயந்திரம், ப்ரெய்லி கடிகாரம் உள்ளிட்டவை உள்பட பலருக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளரும், ராஜ்யசபா எம்பியுமான வைத்திலிங்கம், ``தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. கூட்டணி குறித்து எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது. முதல்வரும், துணை முதல்வரும் என்ன முடிவெடுக்கிறார்களோ அதுதான் கட்சியின் முடிவும். ஜெயலலிதா ஆன்மா எங்களுடன் இருப்பதால்தான் இரண்டு ஆண்டுகளாக ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது. ஆட்சியை கலைக்க தினகரன் முயற்சித்தும் ஜெயலலிதா ஆன்மா விடவில்லை. ஒரு சிலரை மாற்று சக்திகள் பயன்படுத்துகிறார்கள். இதனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை’’ என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.