இலங்கையில் போர்க்குற்ற அச்சம் இனியில்லையாம்!

போர்க் குற்­றங்­கள், மனித உரிமை மீறல்­கள் தொடர்­பில் பன்­னாட்டு நீதி­மன்­றத்­தில் இலங்கை தண்­டிக்­கப்­ப­டும் என்ற அச்­சம் காணப்­பட்­டது. அதனை நாங்­களே நீக்­கி­னோம்.


இவ்­வாறுதலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்­ளார்.

கிராம எழுச்­சித் திட்ட அறி­முக நிகழ்வு, என்ட பிரைஸ் சிறி­லங்கா ஆரம்ப நிகழ்வு அல­ரி­மா­ளி­கை­யில் நேற்று இடம்­பெற்­றது. இதன்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

இந்த நாட்­டில் 70 ஆண்­டு­க­ளின் பின்­னர் ஏக்­கிய ராஜ்­ஜி­யவை (ஒற்­றை­யாட்சி) நாட்­டில் உள்ள சகல மக்­க­ளும் ஏற்­றுக் கொண்­டுள்­ள­னர். இது எமக்­குக் கிடைத்த வெற்றி. யாரா­லும் இத­னைச் செய்ய முடி­ய­வில்லை. நாங்­களே இத­னைச் செய்­துள்­ளோம்.

அதே­போன்று, நாங்­கள் ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்­னர் பன்­னாட்­டுச் சமூ­கத்­தால் இலங்கை தண்­டிக்­கப்­ப­டும் அபா­யம் காணப்­பட்­டது. அதி­லி­ருந்து இலங்­கையை மீட்­டெ­டுத்­தது நாங்­களே – என்­றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.