அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 366 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.


போட்டியின் நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதல் இன்னிங்சில் முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 04 விக்கட்டுக்களை இழந்து 534 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் துடுப்பெடுத்தாட்டத்தை இடைநிறுத்தியிருந்தது.

பதிலுக்கு முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 215 ஓட்டங்களை பெற்றது.

அதன்படி அவுஸ்திரேலிய அணி 319 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து தனது இரண்டாம் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 03 விக்கட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் துடுப்பெடுத்தாட்டத்தை இடைநிறுத்தியிருந்தது.

516 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 149 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அதன்படி அவுஸ்திரேலிய 2 - 0 என்ற அடிப்படையில் தொடரை வெற்றியீட்டியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

No comments

Powered by Blogger.