"எழுந்து பறந்த காடு"


(பரனி கிருஸ்னரஜனி)
தமிழீழம் என்பது ஏதோ கற்பனையான ஒன்று என்றும்/ சிறீலங்கா எமது அண்டை நாடென்று நாம் விளிப்பதையும்    இன்றைய நாளில்  நக்கலடித்துத் திரிபவர்களுக்கு  சின்ன கதை ஒன்று..


சரியாகப் பத்து வருடங்களுக்கு முன்பு, இதே பெப்ரவரி மாதத்தில் ஒரு நாள் 'சிறீலங்கா' என்று பெயர் பொறிக்கப்பட்ட இரு யுத்த விமானங்கள்  கொழும்பிலிருந்து புறப்பட்டு வந்து வன்னியின் கடலோர தமிழர் குடியிருப்புக்கள் மீது குண்டுகளை வீசி விட்டுச் செல்கின்றன..

சில மணி நேரங்களில் கேப்பாப்புலவு விமானத் தளத்திலிருந்து 'தமிழீழம்' என்று பெயர் பொறிக்கப்பட்ட இரு வான் கலங்கள் சிறீலங்கா தலைநகர் கொழும்பு வான்பரப்பை ஊடறுத்து பறந்து 'சிறீலங்கா' அரசுக்கு சொந்தமான இராணுவ - பொருண்மிய நிலைகள் மீது குண்டுகளை வீசுகின்றன.

தெரியாமல் கேட்கிறேன்..

இது என்ன நமது மக்கள் கண்ட கனவா? இல்லை அம்புலிமாமா கதையா?

இந்த இரண்டு சம்பவத்திற்கும் என்ன பெயர்? ஐக்கிய இலங்கையா? ஒருமித்த நாடா?

போங்கடா போய் புள்ள குட்டியளைப் படிக்க வைக்கிற வேலையைப் பாருங்க..

தமிழீழம் என்ற ஒரு தேசம் இருந்ததற்கான மிக எளிமையான வரலாற்று சாட்சியம் இது.

இன்றைய கேப்பாப்புலவு போராட்டத்தில் மக்கள் கையில் வைத்திருக்கும் இந்தப் பதாகை சொல்லும் வரலாற்றுச் செய்தி இதுதான்..
Powered by Blogger.