அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அரச தரப்பு ஆதரவில்லையா?
நாளைய தினம் இடம்பெறவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள், அமைப்புகள் என அனைவரும் ஆதரவு தெரிவித்து அறிக்கைகள் விடுத்துள்ள போதும். தற்போது ( 24, மாலை) வரை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக ஆதரவுத் தெரிவித்து அறிக்கை எதனையும் விடவில்லை.வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு,சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, ஈபிடிபி, யாழ் பல்லைகழக சமூகம், வர்த்தக சங்கங்கள், என பலரும் நாளைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கைகள் விடுத்துள்ள நிலையில்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இதுவரை உத்தியோகபூர்வமாக ஆதரவு தெரிவித்து அறிக்கைகள் எதனையும் வெளியிடவில்லை. அக் கட்சியின் தலைவர் சம்மந்தன் ஐயாவோ, அல்லது கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் அவர்களோ, அல்லது தமிழரசு கட்சியின் தலைவர் சேனாதிராஜாவோ ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிடாமை தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவலை தெரிவித்துள்ளனர்.
சில வேளை அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆளும் கட்சியான தாங்கள் ஆதரவில்லையோ?!
- மு.தமிழ்செல்வன்-
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
.jpeg
)





கருத்துகள் இல்லை