தொழிநுட்ப பீடத்தில் பகடிவதை சூழலினாலேயே பீடத்திற்குள் நுழைவதற்கு தடை!
யாழ்.பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி தொழிநுட்ப பீடத்தில் பகடி வதையை தொடா்ந்து இடம் பெற்ற பதற்றமான சூழலினாலேயே பீடத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக தொிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை புதுமுக மாணவர்களை சிரேஷ்ட மாணவர்கள் கடுமையான பகிடி வதைக்கு உட்படுத்தியிருக்கின்றனர். சம்பவம் தொடர்பாக புதுமுக மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் பதற்றமடைந்து, பல்கலைக் கழக நிர்வாகத்துக்கு அறித்துள்ளனர்.
சம்பவத்தையடுத்து உப விடுதிக் காப்பாளர் சம்பவம் தொடர்பாக விசாரிக்க முனைந்த போது, சிரேஷ்ட மாணவி ஒருவர் தகாத வார்த்தைகளினால் உப விடுதிக் காப்பாளரை ஏசியதுடன், சம்பவத்தை ஒளிப்பதிவு செய்த தொலைபேசியைப் பறித்துச் சென்றதுடன்,
விடுதியினுள் கலகத்தில் ஈடுபட்டுமுள்ளனர். இதனையடுத்து, நேற்று செவ்வாய்க்கிழமை பிரதிப்பதிவாளர் ஒருவருமாக நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முனைந்த போது, பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் மற்றும்
விரிவுரைகளுக்கெதிராக சிரேஷ்ட மாணவர்கள் குழப்பத்திலீடுபட்டனர். நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் நேற்று மாலை தொழிநுட்ப பீடத்தில் கல்வி பயிலும் சகல மாணவர்களும் உள் நுழையா வண்ணம் துணைவேந்தரினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பகிடி வதைக்கெதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், யாழ். பல்கலைக்கழகத்தில் இதுவரை காலமும் கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுவதில்லை. இம் முறை பகிடி வதைக்கெதிரான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை - சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடியும் வரை
மாணவர்கள் மீதான உள்நுழைவுத் தடை நீக்கப்பட மாட்டாது என அறிய வருகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை