முகநுால் நட்பால் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!!
பேஸ்புக் ஊடாக நட்பாகிய சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
15 வயதான சிறுமியை தாய்மை அடையச் செய்த இளைஞனை மதவாச்சி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் பிட்டிகல பிரதேசத்தை சேர்ந்த 20 வயதானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிட்டிகல பிரதேசத்தை இளைஞன் மதவாச்சி பிரதேசத்தை சேர்ந்த சிறுமியுடன் பேஸ்புக் ஊடாக நண்பராகியுள்ளார். இதன் மூலம் இருவருக்கும் இடையில் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக பிட்டிகல பிரதேசத்தில் இருந்து மதவாச்சி பிரதேசத்திற்கு சென்று சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதற்கமைய இளைஞனை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
கருத்துகள் இல்லை