வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அம்மாச்சி உணவகம் திறந்து வைப்பு!!

வடக்கின் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகம்  வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமார் தலமையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (01.03) காலை 8.30 மணியளவில்  திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை நலன்புரி சங்கம் , வவுனியா மாவட்ட விவசாய திணைக்களம் , வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில் அமைக்கப்பட்ட  அம்மாச்சி உணவகத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ப.பசுபதிராஐா , பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மு.மகேந்திரன் , வவுனியா மாவட்ட விவசாய திணைக்கள பணிப்பாளர் மற்றும் செயலாளர் , வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் , வைத்தியர்கள் , பிராந்திய சுகாதார திணைக்கள ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு பாரம்பரிய உணவு வகைகள் நுகர்வோருக்கு உடனுக்குடன் தயாரித்துப் பரிமாறப்பட இருப்பதாகவும் எந்தவிதமான செயற்கை நிறமூட்டிகளோ ,செயற்கைச் சுவையூட்டிகளோ உணவில் சேர்க்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.