வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரண்டு புலிகளைத் தத்தெடுத்த விஜய் சேதுபதி!

தன் எதார்த்த நடிப்பினால் மக்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகராகி 'மக்கள் செல்வன்' என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி.
ஒரே சமயத்தில் பல படங்களை கைவசம் வைத்திருப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு படத்திற்கும் தன்னை வித்தியாசப்படுத்தி காட்டுவார். சமீபமாக, சீனு ராமசாமி இயக்கத்தில் 'மாமனிதன்' படத்தை முடித்த விஜய்சேதுபதி விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் இணைய இருக்கிறார்.

தவிர, 'சிந்துபாத்', 'சூப்பர் டீலக்ஸ்', 'இடம் பொருள் ஏவல்', 'துக்ளக்', தெலுங்கில் 'சைரா நரசிம்ம ரெட்டி' உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட மனிதராக அவ்வப்போது குரல் கொடுத்தும் வருகிறார்.

இந்நிலையில், இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு தன் மகளுடன் சென்ற விஜய் சேதுபதி அங்குள்ள ஆர்த்தி, ஆதித்யா என இரண்டு புலிகளைத் தத்தெடுத்துள்ளார். அதன் பராமரிப்பிற்காக 5 லட்ச ரூபாய்கான காசோலையையும் வழங்கியுள்ளார். இதற்கு முன் நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூரில் உள்ள வெள்ளைப் புலியைத் தத்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.