`ஆர்வக்கோளாறில் வரமாட்டேன்; கற்றுக்கொண்டு வருவேன்' - அரசியல் குறித்து நடிகை வரலட்சுமி!

அரசியலை நன்கு கற்றுக்கொண்டு சரியான நேரத்தில் அரசியலுக்கு வருவேன் என நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று பள்ளி மாணவிகளுக்கான இலவச நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் கொடுக்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகை வரலட்சுமி சரத்குமார் கலந்துகொண்டு நாப்கின் இயந்திரங்களை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வரலட்சுமி, ``பிறந்த நாளை முன்னிட்டு இந்த நாப்கின் இயந்திரங்களை வழங்குவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. பெண்கள், தங்கள் பாதுகாப்பை தாங்களே உறுதிப்படுத்திக்கொள்ளத் தற்காப்பு கலைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். அபிநந்தன் நாடு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. அபிநந்தனை சிறைபிடித்தவுடன் நாட்டு மக்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து அவரை மீட்டெடுத்தனர். அதேபோன்று ஒரு கொந்தளிப்பை விவசாயிகள் விஷயத்திலும் காட்டினால் இன்னும் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும்.

சமூக வலைதளங்களை சரியான வழியில் பயன்படுத்த வேண்டும்" என்றவரிடம், அரசியலுக்கு வருவீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ``நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். ஆனால் ஆர்வக்கோளாறில் சீக்கிரமாக அரசியலில் குதித்து விடமாட்டேன். ஏனென்றால் அரசியலில் இறங்கக்கூடிய போதிய அனுபவம் இல்லை. இருப்பினும் சரியான நேரத்தில் முழுவதுமாக அரசியலைக் கற்றுக்கொண்டு, நல்ல தலைவராக வருவேன். என் தந்தை சரத்குமாரின் அரசியலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை" என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.