இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்!!

காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில், இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காணாமலாக்கப்பட்டோருக்கான பணியகத்தின் தலைவர் கலாநிதி சாலிய பீரிஸ் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், “காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் இடைக்கால நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக, பணியகத்தின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

கடத்தல்கள், மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்களுடன் தொடர்புபட்ட குற்றவியல் நடவடிக்கைகளில் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்ட அரசாங்க அதிகாரிகளை பணியில் இருந்து இடைநிறுத்துவது தொடர்பான பரிந்துரைகள் அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருந்தன.

ஒரு நாடு என்ற வகையில், உண்மை, நீதியை வழங்குதல், காணாமல் போனோரின் குடும்பங்களின் உரிமைகளை பெற்றுக்கொடுத்தல் எமது கடமையாகும். அந்தவகையில் இந்த இடைக்கால அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோருக்கான பணியகம் உருவாக்கப்பட்ட ஆறு மாதங்களில், கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், இடைக்கால அறிக்கையை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.