அன்ரன் பாலசிங்கம் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டார்!! மஹிந்த அணி!!

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகராக செயற்பட்ட அன்ரன் பாலசிங்கம் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டதாகவும், எனினும் அவர் பிரித்தானியாவில் சுதந்திரமான முறையில் செயற்பட்டதாகவும் மஹிந்த அணி குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜீ.எல்.பீரிஸ், “30 வருட கால யுத்தத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு நாட்டில் பல்வேறு முறைகேடான சம்பவங்களை தோற்றுவித்தது.

வடக்கிலும், தெற்கிலும் அப்பாவி பொது மக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டனர். இறுதி யுத்தத்தின்போது தமிழ் இளைஞர் யுவதிகள் பலர் பலவந்தமான முறையில் விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைக்கப்பட்டார்கள்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகராக செயற்பட்ட அன்டன் பாலசிங்கம் போர் குற்றச் செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்பதற்கான தகுந்த ஆதாரங்கள் காணப்பட்ட போதும் அவர் பிரித்தானியாவில் சுதந்திரமாகவே செயற்பட்டார்.

இலங்கையில் பயங்கரவாதிகளாக அடையாளம் காணப்பட்டவர்களில் பலர் இன்றும் மேற்குலக நாடுகளில் அரசாங்கத்தின் ஆதரவுடன் சுதந்திரமாக செயற்பட்டு எமது நாட்டு இராணுவத்தினருக்கு எதிராக இன்று குரல் எழுப்புகின்றார்கள்.

இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகளில் மனித உரிமை பேரவை ஒரு தலைபட்சமாகவே செயற்படுகின்றது.

மேற்குலக நாடுகளின் பார்வையில் விடுதலைப் புலிகள் அமைப்பு எவ்விதமான குற்றச் செயற்பாடுகளிலும் ஈடுபடாத அமைப்பாகவே காண்பிக்கப்பட்டுள்ளனர்.

இரு தரப்பு குற்றங்களையும் மன்னிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட ஆளும் தரப்பினர் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

விடுதலைப் புலிகள் குறுகிய விடயங்களை மாத்திரம் மையப்படுத்தி நாட்டுக்கு எதிராகப் போராடினார்கள். ஆனால் இராணுவத்தினர் ஒட்டுமொத்த மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி நாட்டுக்காகப் போராடி வெற்றியடைந்தார்கள்.

ஆகவே இவ்விடயத்தில் விடுதலைப் புலிகளையும் இராணுவத்தினரையும் ஒன்றாக இணைத்து மதிப்பிட முடியாது. இரண்டு தரப்பினருக்கும் இடையைில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன“ என தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.