பழம்பெரும் நகைச்சுவை நடிகர் டைப்பிஸ்ட் கோபு காலமானார்!

சிவாஜி, எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து நடித்து வந்தவர், டைப்பிஸ்ட் கோபு. 'அதே கண்கள்', 'ருத்ரா' படங்களில் காமெடி ரோலில் நடித்திருப்பார். உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவந்த  இவர், இன்று மாலை 4.30 மணியளவில் இயற்கை எய்தினார்.


நடிகர் , எழுத்தாளர் சோ மற்றும் ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரின் நாடகங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் கோபு.  இவரது நடிப்புத் திறமை காரணமாகப் பிரபலமானவர். முதன்முதலில் நடிகர் நாகேஷுக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வழிகாட்டியாக இருந்தவர் இவர்தான். நாகேஷுடன் நெருங்கிய நட்பு பாராட்டிவந்தார். வயது மூப்பின் காரணமாக சினிமாவிலிருந்து விலகி இருந்தார். பொருளாதாரரீதியாக மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் சென்னை அம்பத்தூரில் வசித்துவந்தார். இந்நிலையில், சில சினிமா நட்சத்திரங்கள் இவருக்கு பண உதவிகள் செய்துவந்தனர். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக, இவருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுவந்தது. கடந்த சில நாள்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த இவர், இன்று காலமானார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்த கோபு, 700-க்கும் அதிகமான திரைப்படங்களிலும், ஏராளமான நாடகங்களிலும் நடித்திருக்கிறார். 
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.