அவர் என் சாய்ஸ் அல்ல; ' - கோலி ஓப்பன் டாக்!
```விஜய் சங்கர் கடைசி ஓவர் வீச வேண்டும் என்பது என்னுடைய முடிவு அல்ல" என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்லோ பிட்ச், ஸ்டோனிஸ், ஹேண்ட்ஸ்கூம்ப் உள்ளிட்டோரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணியின் வெற்றி கடைசி ஓவர் வரை கேள்விக்குறியாகவே இருந்தது. குறிப்பாகக் கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், விஜய் சங்கர் சிறப்பாக பந்துவீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியை வசமாக்கினார். இந்த நிலையில், விஜய் சங்கரை கடைசி ஓவர் வீச வைத்தது தான் அல்ல என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ``விஜய் சங்கர் அல்லது கேதர் ஜாதவ்வை தான் 46-வது ஓவரை வீச வைக்கலாம் என நினைத்திருந்தேன்.
இதை தோனியிடம் கூறும்போது `வேண்டாம், பும்ரா அல்லது ஷமி வீசட்டும்' எனக் கூறிவிட்டார். இதையே ரோஹித் ஷர்மாவும் கூறினார். பும்ரா அல்லது ஷமி வீசினால் மேலும் சில விக்கெட் விழும்போது அணியின் வெற்றிக்கு உதவும் என ஐடியா கூறினர். இருவரும் நல்ல அனுபவம் உள்ளவர்கள். அவர்களிடம் பேசுவது நல்ல பலனைக் கொடுத்தது. இருவரும் ஆட்டத்தை நன்கு கணித்து வைத்திருந்தார்கள். அவர்கள் சொன்னது போலவே நடந்தது. பும்ரா 46-வது ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார். அதேபோல் விஜய் சங்கர் சரியான திசையில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார். நிச்சயம் அவருக்கு இது ஒரு நல்ல ஆட்டமாக அமைந்திருக்கும். இதேபோல் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியது ஆட்டத்தின் போக்கை மாற்றியது.
கடைசி ஓவரை வீச கேதர் ஜாதவ் என் சாய்ஸாக இருந்ததுக்குக் காரணம் இந்த பிட்ச் அவருக்கு எனத் தயார் செய்யப்பட்ட மாதிரியே இருந்தது. அதனால் தான் அவரைப் பந்துவீச வைக்கலாம் என எண்ணியிருந்தேன்" என்றவரிடம், 40வது சதம் குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த கோலி, ``நான் பேட் செய்ய நுழையும்போது சூழ்நிலை கடினமாகவே இருந்தது. தலையைத் தொங்கப்போட்டு ஆடுவதைத் தவிர வேறு வழியில்லை எனத் தோன்றியது. கேதர், தோனியை அடுத்தடுத்து இழந்தோம். ஆனால், ஒட்டுமொத்த ஆட்டமும் முடிந்தபின் பார்க்கையில் இரண்டாவது இன்னிங்ஸுக்கு முதல் இன்னிங்ஸ் பரவாயில்லை என்பதுபோல் இருந்தது. 40வது சதம் விளாசியதை மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஆனால், இது வெறும் நம்பர் மட்டுமே. இதைவிட அணி வெற்றி பெறுவதே அதிக மகிழ்ச்சியைத் தரும்" என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை