மன்னார் புதைகுழி விபரம் தொடர்பாக நம்மவர்கள்!!

மன்னாரில் கண்டு பிடிக்கப்பட்ட புதைகுழியில் மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் பற்றிய காபன் அறிக்கை வெளிவந்துள்ள நிலையில் அது தொடர்பில் சந்தேகங்கள், அதிருப்திகள் விவாதங்கள் என செய்திகள் ஆய்வுகள் சூடுபிடித்துள்ளன.

இந்த நிலையில் ஊடகமொன்றின் ஆய்வு நிகழ்ச்சியில், தொல்பொருள் ஆய்வாளரும் யாழ் பல்கலைக்கழக பேராசிரியருமான புஸ்பரட்ணம் மற்றும் யாழ்ப்பாணம் சங்கிலிய மன்னனின் கடைசி வாரிசு எனச்சொல்லப்படும் றெமிஜியஸ் கனகராசா ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.  சங்கிலியனின் கடைசிவாரிசு தனது கருத்தில்,

தனது மூதாதையரான சங்கிலி மன்னன் இந்து மதத்தில் இருந்து மதம் மாறிய மதம் மாறிகளை சிரச்சேதம் செய்தது என்பது உண்மையான விடயம். சிரச்சேதம் செய்யப்பட்டவர்களில் சங்கிலி மன்னனின் படைத்தளபதியும் ஒருவர்.அது மன்னாரில் இடம்பெற்றது.அது மன்னாரின் பட்டி என்ற இடத்தில் இடம்பெற்றதான ஆதாரத்தை வத்திக்கானும் ஆவணப்படுத்தியுள்ளது.தற்பொழுது புதைகுழி கண்டு பிடிக்கப்பட்ட இடத்துக்கும் சங்கிலி மன்னன் சிரச்சேதம் செய்த இடத்துக்குமான தூரம் 20கிலோ மிற்றர் எனவே சங்கிலி மன்னன் மீது மன்னார் புதைகுழி விவகாரத்தை தொடர்பு படுத்துவது தவறானவிடயம்.இது பற்றி இலங்கை அரசாங்கம் விசாரணை நடத்தவேண்டுமென நான் கேட்டுள்ளேன் என தெரிவித்தார்.
பேராசிரியர் புஸ்ரட்ணம் கருத்து வெளியிடுகையில்

மன்னார் எலும்புக்கூடுகள் விடயங்கள் தொடர்பாக நான் ஊடகங்கள் வாயிலாகவே அறிந்துகொண்டேன்.நானும் ஊடகங்கள் தற்பொழுது காபன் அறிக்கை கிடைத்தபின்வரை சொல்லும் கருத்துக்களையே அறிந்து வைத்துள்ளேன்.நான் மன்னார் எலும்புக்கூடுகள் தொடர்பில் முடிவான கருத்தை சொல்லமுடியாது.ஏனெனில் நானோ என் துறை சார்ந்த மாணவர்களோ அதில் ஈடுபடவில்லை.வழமையாக இலங்கையில் நடைபெறும் தொல்பொருள் அகழ்வு இத்துறை சார்ந்த விடயங்களில் இலங்கை தொல்பொருட் திணைக்களம் எம்மை இணைத்தே பணிகளை மேற்கொண்டு வந்துள்ளது.ஆனால் மன்னார் புதைகுழி மாத்தளை புதைகுழி என்பன தனிப்பட்ட ஒருவரே கையாண்டுள்ளார் என தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.