இரணைமடு சிறுபோகம் 15 ஆயிரம் ஏக்கரில்!

இரணைமடுகுளத்தின் கீழான 2019 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கை 15 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இன்று(12) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற இரணைமடு சிறுபோகம் நெற்செய்கை கூட்டத்தின் போதே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரணைமடுகுளம் புனரமைப்புக்கு முன் சுமார் 8500 ஏக்கர் வரை மேற்கொள்ளப்பட்ட சிறுபோக நெற்செய்கை தற்போது 15 ஆயிரம் ஏக்கராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஒன்று தொடக்கம் ஆறு ஏக்கர் வரை வயற்காணிகளை கொண்டவர்களுக்கு மூன்று ஏக்கரும், ஆறு தொடக்கம் எட்டு ஏக்கர் வரை நான்கு ஏக்கரும், எட்டு தொடக்கம் பத்து ஏக்கர் வரை ஐந்து ஏக்கரும், பத்து தொடக்கம் 15 ஏக்கர் வரை ஆறு ஏக்கரும், 15 தொடக்கம் 20 ஏக்கர் வரை ஏழு ஏக்கரும், இருபதுக்கு மேல் வயற்காணிகளை கொண்டவர்களுக்கு எட்டு ஏக்கரும் சிறுபோகம் நெற்செய்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

No comments

Powered by Blogger.