Brexit-ஆல் தீவிரவாத அபாயங்கள் அதிகரிக்கும்: எச்சரிக்கும் சுவிஸ் அமைச்சர்!

ஒப்பந்தங்கள் இன்றி நிறைவேறும் பிரெக்சிட்டால் தீவிரவாதம் தொடர்பான அபாயங்கள் அதிகரிக்கும் என சுவிட்சர்லாந்தின் நீதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தங்கள் அற்ற பிரெக்சிட் என்று ஒன்று நிறைவேறுமானால், சுவிட்சர்லாந்துக்கு தெரியாமலே பிரித்தானியாவிலிருந்து ஒரு தீவிரவாதி சுவிட்சர்லாந்துக்குள் நுழையும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கிறார் நீதித்துறை அமைச்சரான Karin Keller-Sutter.
குற்றங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் ஷெங்கன் தகவல் அமைப்பு (SIS) என்ற ஒரு ஐரோப்பிய ஒன்றிய டேட்டாபேசுக்கு பிரித்தானியா அனுப்புவதுண்டு.
இந்நிலையில், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து மார்ச் 29 அன்று வெளியேறும் பட்சத்தில் இந்த தகவல் அனுப்பும் திட்டம் முற்றிலும் தடைபட்டுப்போகும்.

SIS என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடல்லாத சுவிட்சர்லாந்து உட்பட, 31 ஐரோப்பிய நாடுகள் பகிர்ந்து கொள்ளும் பொலிஸ் உளவுத்துறை தகவல்கள் சேமித்து வைக்கப்படும் சேமிப்பகம் ஆகும்.
அதில் சந்தேகத்துக்குரிய ஆவணங்களிலிருந்து திருட்டுப்போன கார்கள் வரை, தேடப்படும் நபர்கள் முதல் காணாமல் போன பொருட்கள் வரை அனைத்தையும் குறித்த தகவல்கள் சேகரித்து வைக்கப்படுகின்றன.
தற்போது ஒப்பந்தங்கள் எதுவுமின்றி பிரித்தானியா வெளியேறும் பட்சத்தில், பிரித்தானியாவில் மட்டுமல்ல, மீதி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும், சுவிட்சர்லாந்திலும்கூட மோசமான விளைவுகள் ஏற்படும் என்கிறார் Keller-Sutter. பிரித்தானியாவைப் பொருத்தவரையில், பல முக்கியமான தகவல்களை அது அளிக்கிறது, குறிப்பாக தீவிரவாதத்திற்கெதிரான போராட்டம் தொடர்பான தகவல்களை, என்கிறார் அவர்.
கடந்த ஆண்டு பிரித்தானிய அதிகாரிகள் SIS அமைப்பில் 439 வழக்குகளை கையில் எடுத்துக் கொண்டார்கள் என்னும் Keller-Sutter, அவற்றில் பெரும்பாலானவை தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள் குறித்தவை என்கிறார்.
ஆனால் இது குறித்து எந்த கவலையும் அற்ற ஐரோப்பிய ஆணையமோ, தனது கொள்கைகள் குறித்து கவலைப்படுகிறதேயொழிய, பாதுகாப்பு குறித்து கவலைப்படவில்லை என்கிறார் அவர்.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற இன்னும் குறைவான நாட்களே இருக்கும் நிலையில், செவ்வாயன்று பிரதமரின் பிரெக்சிட் ஒப்பந்தத்தை ஏற்பதா வேண்டாமா என்பது தொடர்பான வாக்கெடுப்பு ஒன்று நடைபெற இருக்க, பிரெக்சிட் ஒப்பந்தத்தில் கடைசி நேர மாற்றங்கள் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பிரித்தானிய பிரதமர் தெரசா மே.
பிரெக்சிட் தலைகீழாக திரும்பி விடுமோ என்னும் அச்சத்தில் சிலர் இருக்க, மேயின் முயற்சி தோற்றால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரெக்சிட்டை தள்ளி வைக்க அவரை வற்புறுத்தலாம், அவ்வாறு தள்ளி வைக்கப்படாவிட்டால், ஒப்பந்தங்கள் இன்றி நிறைவேற்றப்படும் பிரெக்சிட்டால் பிரித்தானியாவில் கடும் குழப்பங்கள் ஏற்படும் என்கின்றார்கள் மற்றவர்கள்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.