ஊட்டி நகருக்குள் புகுந்த கரடி!!

ஊட்டி நகருக்குள் புகுந்த கரடியை 10 மணி நேர போராட்டத்துக்குப் பின் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.


ஊட்டி நகரில் நேற்று இரவு உலவிய கரடி குறித்து இன்று காலை வனத்துறையினருக்கு தகவல்தெரிந்தது. உடனடியாக வனத்துறை ஊழியர்கள் பார்த்தபோது பாலாஜி என்பவரது வீட்டின் பின்புறம் இருந்தது தெரியவந்தது. உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வழி தவறி நகருக்குள் புகுந்த கரடியைப் பிடித்து வனத்துக்குள் விட வனத்துறையினர் முடிவு செய்தனர்.


கரடியை மயக்க ஊசி செலுத்தியே பிடிக்க முடியும் என்பதால் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஆனால், காலை 6 மணியளவில் தகவல் தெரிவித்து மதியம் இரண்டு மணிக்கே வன கால்நடை மருத்துவர் வந்து சேர்ந்தார். பின்னர் துப்பாக்கி மூலம் மயக்க மருந்தை செலுத்தி மயக்கடையச் செய்தனர். பின்னர் வனத்துறையினர் முதுமலையில் இருந்து வரவழைக்கப்பட்ட கூண்டில் ஏற்றி லாரி மூலம் கொண்டு சென்றனர்.


முதுமலை வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். நகரின் மையப்பகுதி என்பதால் கரடியைக் காண ஏராளமான மக்கள் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது​​​​​​.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

No comments

Powered by Blogger.