கச்சதீவு திருவிழா ஆரம்பம்!

வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.


குறித்த திருவிழாவில் இலங்கை – இந்திய பக்தர்கள் 9400க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்களென எதிர்பார்க்கப்படுகின்றது.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று மாலை 5 மணியளவில் கொடியேற்றப்பட்டு ஆரம்பமாகும் திருவிழா நாளை வரை நடைபெறவுள்ளது.

மேலும் இலங்கை – இந்திய பக்தர்கள் அனைவரும் இத்திருவிழாவில் கலந்துகொள்வதற்கான சகல ஏற்பாடுகளையும் இலங்கை கடற்படை மேற்கொண்டுள்ளன.

அந்தவகையில் இந்தியாவிலிருந்து வருகைதரும் பக்தர்களுக்கு அவர்களின் படகுகளை தரித்து வைப்பதற்கு தனியான இடம் ஒதுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.