இந்துக்களால் அனுஷ்டிக்கப்படும் சாவித்திரி விரதம்!

பிற மொழிகளிலும், சமயங்களிலும் இல்லாத தொண்மையும் அழகும் தமிழ் மொழிக்கும், இந்து சமயத்திற்கும் உண்டு என கூறலாம்.

அந்த வகையில் பெண்களுக்கே உரித்தான நோம்புகளில் ஒன்றாக தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நோம்பான சாவித்ரி நோம்பு  நேற்று  (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது.

தன் கணவனின் நீண்டநாள் ஆயுள் வேண்டி பெண்கள் மனமுறுகி இறைவனிடம் மன்றாடும் நாள் எனக் கூறலாம்.

உண்மையில் இதற்கு சாவித்திரி நோம்பு என பெயர் வர காரணம் என்ன? சாவித்ரி என்பவள் மத்திர நாட்டு மன்னன் அசுவபதிக்கு சூரியபகவானின் அருளால் கிடைக்கப்பெற்ற மகள்.

சாவித்ரி திருமண வயதை அடைந்தவுடன் அவளுக்கு ஏற்ற இளவரசனை தேடி நாடு முழுவதும் சுற்றித்திருந்தார். இறுதியில் கானகத்தில் சத்தியவானை கண்டு காதல்கொண்டார். இருப்பினும் விதி என்றவொன்று இருவரின் வாழ்க்கையிலும் விளையாட ஆரம்பித்தது. இது, சத்தியவானை மணாளனாக அடைவது என்ற சாவித்ரியின் எண்ணத்துக்கு முட்டுக்கட்டையாய் அமைந்தது.

திருமணம் முடிக்க எத்தணித்த பொழுதில் இருந்து 12 மாதங்களில் சத்தியவான் இறக்கபோகிறார் என்ற செய்தி சாவித்திரியின் காதில் விழுந்தது. இருப்பினும் மனம் தளராத சாவித்ரி, சத்தியாவான் கரம்பற்றி கானகம் சென்றார்.

சத்தியவான் இறப்பதற்கு மூன்று நாட்களே எஞ்சியுள்ள நிலையில், சாவித்ரி ஊண் உறக்கமின்றி கண்ணீர் மல்க கணவனின் நீண்ட வாழ்விற்காக பிரார்த்தனைகள் செய்தாள். அடுத்தநாள் விறகு வெட்டச் சென்ற கணவன் சத்தியவானுடன் அவளும் உடன்சென்றாள். காட்டிற்குச் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் சத்தியவான், சாவித்திரியின் மடிமீது தலை வைத்து உயிர் துறந்தான்.

அப்போது சத்தியவானின் உயிரை அழைத்துச் செல்ல வந்த யமதூதர்களால் சாவித்திரி அமர்ந்திருந்த இடத்தை நெருங்கமுடியவில்லை. எனவே யமனே நேரில் வந்து சாவித்திரியைப் பார்த்து, சத்தியவானின் உயிர் பிரிந்த உடலை விட்டுவிடு. மரணம் மனிதனின் விதி என்றதும் சாவித்திரி, சத்தியவான் உடலை விட்டு விலகி நின்றாள்.

பின்னர் சத்தியவானின் உயிரை அழைத்துக்கொண்டு சென்ற யமனின் வழியை பின் தொடர்ந்து சென்ற சாவித்திரி, ஒரு அன்புக் கணவனையும் அவனுடைய அன்பு மனைவியையும் உங்கள் மாறாத விதி பிரிக்கக்கூடாது என யமனிடம் வேண்டினாள். சாவித்திரியின் பதிபக்தியை கண்டு பாராட்டிய யமதர்மராஜன், எதாவது ஒரு வரம் கேள் என்றார். அதற்கு சாவித்திரி, என் மாமனாரின் சந்ததி அழியாமல் இருக்கவும், அவருடைய அரசு சத்தியவானின் மகன்களுக்கு கிடைக்கவும் வரம் வேண்டினாள்.

இதைக் கேட்ட யமதர்மன், “உன் கணவன் மீண்டும் உயிர் பெறுவான். உன் குழந்தைகள் அரசாள்வர். உன் அன்பு மரணத்தை வென்றுவிட்டது. உண்மையான அன்பிற்கு முன்னால் மரணதேவனான நான்கூட ஆற்றல் அற்றவன் என்பதற்கு நீ சான்று” பாராட்டினார்.

அன்றிலிருந்து இன்றுவரை பெண்களால் கணவனின் நீண்டநாள் வாழ்விற்காக இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

No comments

Powered by Blogger.