பிரெக்ஸிற் தொடர்பாக டொனால்ட் ட்ரம்ப் விசனம்!

பிரெக்ஸிற் நடவடிக்கைகள் கையாளப்படும் விதம் தனக்கு ஆச்சரியமளிப்பதாகவும் இரண்டாவது பிரெக்ஸிற் மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படக்கூடாது எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த தனது அறிவுரைகளை பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே செவிமடுக்கவில்லையெனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பிரெக்ஸிற் மீதான இரண்டாவது மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படக்கூடாது என தனது கண்டனத்தை வெளிப்படுத்திய ட்ரம்ப் அவ்வாறு செய்வது முதலாவது வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற மக்களுக்குச் செய்யும் பெரும் அநியாயம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலை மிக விரைவில் நீங்க வேண்டுமென தாம் விரும்புவதாகவும் அயர்லாந்துப் பிரதமருடனான தனது சந்திப்பின்போது அமெரிக்க ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.