விமானத்தில் தீ – அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

நியுயோர்க்கிலிருந்து லண்டன் சென்ற போயிங் 777 ரக விமானத்தில் தீப்பரவல் ஏற்பட்டதையடுத்து கனடா, சென். ஜோன்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று(செவ்வாய்கிழமை) அவசரமாக தரையிறக்கப்பட்டது.


209 பயணிகளுடன் ஜோன் எப். கெனடி சர்வதேச விமானநிலையத்திலிருந்து லண்டன் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்துக்கு சென்ற போயிங் 777 ரக விமானத்திலேயே தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

விமானம் பறந்து சில மணி நேரங்களில், விமானத்தின் பொதிகள் களஞ்சியப்படுத்தும் இடத்தில் ஏற்பட்ட தீப்பரவல் குறித்து பயணிகளால் விமானிக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சாமர்த்தியமாக செயற்பட்ட விமானி, குறித்த விமானத்தை கனடாவின், சென். ஜோன்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார்.

இதனால், விமானத்தில் பயணித்த 209 பேரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர்.

போயிங் ரக விமானங்கள் தொடர்ச்சியாக விபத்துக்குள்ளாகி வரும் நிலையில், இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அதில் பயணித்த பயணியொருவர், இது அதிர்ஷ்டவசமான ஒன்றாகும் என்றும் விமானி குறித்த நேரத்தில் சாதூர்யமாக செயற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.