தனிமையின்புலம்பல்கள்..!

தனித்திருக்கும் அக்கூடு
இப்போதும் வெறுமையாகவே
இருந்தது
கூட்டுக்குள் இருக்க விருப்பின்றி
கிளையினில்
சோகமாய் அமர்ந்திருந்தது
தனித்த குருவி
பனை மரக்காட்டினுள்
வட்டுக்குள் கட்டப்பட்டிருந்த
தேனீக்களின் கூட்டை
ஒப்பீடு செய்ததில்
வேற்றுமை அற்ற ஒற்றுமையின்
வலிமையையும் நேசத்தினையும்
ஒவ்வொரு தேனீக்களும்
ரீங்காரமிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்து நீண்டதொரு
பெருமூச்செறிந்தது
கூட்டை எப்படியும் கட்டிக்கொள்ளலாம்
அங்கே அவை எப்படி வாழ்கின்றன என்பதுதான் முக்கியம்
என்பதை சிந்திக்கத் தொடங்கியது ..
-நிம்மி -
(19.03.2019)
கருத்துகள் இல்லை