லக்ஷ்மன் கிரியெல்லவிற்கு எதிரான முறைப்பாடுகள் குறித்து விசாரிக்க தீர்மானம்!
அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவிற்கு எதிரான முறைப்பாடுகள் குறித்து விசாரணை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.
அரச சட்ட திட்டங்களை மீறி மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பகுதியில் தனது மனைவி , மகள் மற்றும் உறவினருக்கு தலா 50, 20 மற்றும் 10 ஏக்கர் காணிகளை பெற்றுக்கொடுத்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளில் 07 முறைப்பாடுகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக, கிடைத்துள்ள முறைப்பாடுகள் அடங்கிய ஆவணங்களை பொலிஸாரிடம் சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை