தமிழர் நிலம் கண்ணீரில் நிரம்பியது..!!

2019தமிழர்களைச் சுடும் துரோகத் துப்பாக்கி ஈழ தேசத்தின் அழுகுரல் இன்னும் நிறுத்தப்படவில்லை

ஈழம் சிந்திய குருதியின் ஈரம் இதுவரை காய்ந்ததாய் இல்லை

வானென நிமிர்ந்த விடுதலைக் குரல்
ஈர் பத்தியொரு நாடுகளால் உடையுண்டது

துரோகமும் குரோதமும் தமிழீழக் குழந்தைகளை உருசி பார்த்துச் சுவைத்தன

மானுட ஆன்மாக்களின் கதறல் நந்திக் கடலில் பேராறானது

முல்லைத் தீவின் கொல்லைப் புறமெங்கும் கொத்துக் குண்டுகள் சன்னதங்கொள்ள

சனங்கள் விமானக் கழுகுகளால் பச்சையாகப் பொரித்துப் புதைக்கப் பட்டன

எஞ்சிய பால்குடி மாறா பால் மணம் நிறைந்த குழந்தைகள் இன்று வரை காணாமால் ஆக்கப்பட்டானர்

வீதிகள் தோறும் விடுதலைப் பிச்சை ஏந்திய தாய்க்குலத்தின் கதறல் பெரும் எழுச்சியாகி வெடிக்க

கறுத்தாடுகளின் கூட்டம் துரோகத் துப்பாக்கியால் 2019இல் சுடத் தொடங்கினர்

2009இல் நிறுத்தப்பட்ட கொலைத்தனத்தின் விசாரணையை சனங்கள் ஜெனீவாவின் காதுகளில் ஓங்கி உரைக்க அங்கும் சென்றது தமிழ் மக்களை மேயும் கறுத்தாடுகள்

கால அவகாசம் தேவை...!
கால அவகாசம் தேவை...!
கால அவகாசம் தேவை என தமிழ் மக்களை நோக்கி துரோகத் துப்பாக்கியால் சுட்டபடி..!

தமிழர் நிலம் கண்ணீரில் நிரம்பியது

த.செல்வா

No comments

Powered by Blogger.