ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா எப்போது விலகும்..???

இம்மாதம் 29 ம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அதில் பல சிக்கல்கள் உள்ளன.


கடந்த 2016 ஜூன் 23 ம் திகதி நடந்த வாக்கெடுப்பில் ( referendum ) 52% மக்கள் ‘பிரித்தானியா விலக வேண்டும்’ என்று வாக்களிக்க, ஒட்டுமொத்த ஐரோப்பாவும் அதிர்ந்து போனது.

பின்னர் பிரித்தானியாவும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. பிரித்தானிய பிரதமர் தெரேசா மே நினைத்தது போல பேச்சுவார்த்தை அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. EU நாடுகள் கடுமையாக இருந்தன. ஒருவாறாக ஒரு ஒப்பந்தத்தைப் ( withdrawal agreement ) போட்டுவிட்டு, தனது நாட்டு பாராளுமன்றத்துக்கு எடுத்து வந்தார் மே.

அந்த ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான வாக்குகள் பெற்றால் மட்டுமே நிறைவேறும். ஆனால் கடந்த ஜனவரி 15 ம் திகதி தெரேசா மே க்கு அதிர்ச்சி காத்திருந்தது. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் 202 பேர் ஆதரவாக வாக்களிக்க 432 பேர் எதிராக வாக்களித்து கவிழ்த்துவிட்டார்கள்.

‘போய் திருத்தி எழுதிக்கொண்டு வாருங்கள்’ எலி  படத்தில் வடிவேலுவுக்குச் சொன்னது போல    பிரதமரை விரட்டிவிட்டார்கள்.

தெரேசா மறுபடியும் EU வந்தார். சில பல திருத்தங்கள் செய்தார். மறுபடியும் பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்தார். விழுந்தது அடுத்த அடி. கடந்த 12 ம் திகதி.

ஏனைய ஐரோப்பிய நாடுகள் கடும் நிபந்தனைகள் போட்டுள்ளன. இதில் நமது மக்ரோனும் ஜெர்மனிய அஞ்சலா மேகரலுமே கடும் பிடி பிடிக்கிறார்கள் என்று ரகசிய தகவல்கள் சொல்கின்றன.

இனி 3 வது வாக்கெடுப்பு இந்தவாரம் நடக்க உள்ளது. இதிலும் தோல்வியடைந்தால் நிலைமை மேலும் சிக்கலாகும். 29 ம் திகதி நடக்க இருக்கும் ‘பிரிவு’ மேலும் 3 மாதங்கள் தள்ளிப்போகலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.

ஒருவேளை எந்த உடன்படிக்கையும் இல்லாமல் பிரித்தானியா பிரிந்து சென்றால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்..!!!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.