``லட்சுமி ஸ்டோர்ஸ்" நட்சத்திரா ஃபேஷன்ஸ்!!

"காஸ்ட்லியான, பிராண்டட் டிரஸ்தான் போட வேண்டும் என்பதெல்லாம் இல்லை. ஒரு டிரஸ் மனசுக்குப் பிடித்திருந்தால் உடனே பில்லிங்தான்."

மீடியாவில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் நட்சத்திரா. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ``லட்சுமி ஸ்டோர்ஸ்" சீரியலில் மூலம் தன்னுடைய நடிப்புப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். தன்னுடைய க்யூட் ரியாக்‌ஷன்ஸ் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நட்சத்திரா தன்னுடைய காஸ்டியூம் தேர்வு பற்றிப் பகிர்கிறார்.

ஆடைத்தேர்வு:

நான் அணிந்துகொள்ளும் டிரஸ் ட்ரெண்டியா இருக்கா என்பதை விட எனக்குப் பொருத்தமாக இருக்கா என்பதைத்தான் முதலில் பார்ப்பேன். என்னுடைய உடல்வாகுக்கு வெஸ்டர்ன், டிரெடிஷனல் என எந்த வகை காஸ்டியூமும் சூட் ஆகும். அதனால், கலந்துகொள்ளும் நிகழ்ச்சியின் நேரத்தைக் கவனத்தில் கொண்டு ஆடைகளையும் நிறத்தையும் தேர்வு செய்வேன். தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் போடியம் இருக்கிறது என்றால், டாப்ஸ்களுக்கு அதிக கவனம் செலுத்துவேன். போடியம் இல்லாத நிகழ்ச்சிகளில் என்றால் பால் கவுன், கிராண்ட் லெஹெங்கா போன்றவற்றைத் தேர்வு செய்வேன். சீரியலைப் பொறுத்தவரை என்னுடைய கேரக்டருக்கு ஹோம்லி லுக் என்று தெரிந்த பின், புடவை, சல்வார் போன்றவை பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்தோம். சிம்பிளான ஆடைகள் என்றாலும் யுனிக்காக இருக்கும் வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துகிறேன். அதனால், போட் நெக், க்ளோஸ் நெக், ஹை நெக் என வெரைட்டியான ஆடைகளை அணிகிறேன். சில டிரஸ்களை மிக்ஸ் மேட்ச் செய்தும் போட்டுக்கிறேன். மக்களிடம் என்னுடைய ஆடைத்தேர்வுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது.

அக்ஸசரிஸ்:
கம்மலும், கொலுசும்தான் என்னுடைய ஃபேவரைட். யுனிக்கான கம்மல் கலெக்‌ஷன்களும் வெச்சிருக்கேன். கிராண்டான டிரெஸ் அணியும்போது நெக் பீஸ் தவிர்த்துப் பாலி கம்மல், டிசைனர் கம்மல், கிராண்ட் லுக் ஜிமிக்கி கம்மல் போன்றவற்றை அணிந்து கொள்வேன். சீரியலில் சிம்பிள் லுக் என்பதால் ஜிமிக்கி கம்மல், டிசைனர் வளையல்களை யூஸ் பண்றேன்.

ஷாப்பிங்
காஸ்ட்லியான, பிராண்டட் டிரஸ்தான் போட வேண்டும் என்பதெல்லாம் இல்லை. ஒரு டிரஸ் மனசுக்குப் பிடித்திருந்தால் உடனே பில்லிங்தான். நிகழ்ச்சிகளுக்கு அதற்குத் தகுந்தாற் போல் டிசைனர்கள் உதவியுடன் டிசைன் செய்துகொள்வேன். சில நிகழ்ச்சிகள் கடைசி நிமிஷத்தில் ஃபிக்ஸ் ஆகும் என்பதால் எப்போது என்னுடைய வார்ட்ரோப்பில் நான்கு புது டிரஸ்கள் இருந்துட்டே இருக்கும். நான் தேர்வுசெய்யும் ஒவ்வொரு ஆடையையும் அணிந்துபார்த்து வாங்குவதுதான் என்னுடைய பாலிஸி. ஆனால், இப்போது ஷூட்டிங்கில் பிஸி என்பதால் சீரியலுக்குத் தேவையான புடவைகளை மட்டும் ஆன்லைன்னில் வாங்குறேன். ப்ளவுஸ்களை டிசைனர்கள் வடிவமைத்துத் தருகிறார்கள்.

நிறத்தேர்வு:

எனக்கு மஞ்சள் நிறம் ரொம்பப் பிடிக்கும். ஆனால், என்னுடைய வார்ட்ரோப்பில் எல்லா நிறங்களும் மிக்ஸ்ஸாகிதான் இருக்கும். நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும்போது ஸ்டேஜ் பேக் ரவுண்ட், நிகழ்ச்சி நடக்கும் நேரம் போன்றவற்றிக்குத் தகுந்த நிறங்களைத் தேர்வு செய்வேன்.
ஆன்லைன் ஷாப்பிங்கில் நாம் தேர்வு செய்யும் நிறம் சமயத்தில் மாறுபட்டு வரும். அதை ரிட்டன் பண்றதுக்குத் தேவையில்லாமல் டைம் வேஸ்ட் ஆகும் என்பதால் கூடுமானவரை ஆன்லைன் ஷாப்பிங்கைத் தவிர்த்துவிடுவேன். ட்ரெண்டியான அக்ஸசரிஸ் வாங்குவதற்கு ஆன்லைன் பெஸ்ட் சாய்ஸ்.

ஃபேவரைட்:
எனக்கு என ஒரு ஸ்டைல் இருக்கிறது என்பதால் மற்றவர்களின் ஸ்டைலை காப்பி பண்ணமாட்டேன். ஆனால், மற்றவர்களின் ஆடையை ரசிக்க ரொம்பப் பிடிக்கும். செலிபிரெட்டிகளில் நயன்தாரா மேடத்தின் டிரஸ்ஸிங் செம்ம மாஸ். அவங்க நடித்த எல்லாப் படங்களிலேயும் அவங்களோட ஆடைகள் ட்ரெண்ட்செட் ஆயிருக்கு. அதே மாதிரி எனக்கு ஒரு யுனிக்னஸ்ஸை நான் உருவாக்கிக் கொள்கிறேன்.

மெமரபிள் டிரஸ்:
சின்ன வயசிலிருந்தே என்னுடைய டிரஸ்சிங் அம்மா அதிக கவனம் செலுத்துவாங்க. எனக்காக ஒவ்வொரு டிரஸ்ஸையும் பார்த்துப்பார்த்து வடிவமைப்பாங்க. என்னுடைய வார்ட்ரோப்பில் இருக்கும் எல்லா டிரஸ்களும் ஸ்பெஷலாக இருந்தாலும் மெமரபிள் டிரஸ்னா அது என்னுடைய யூனிஃபார்ம்தான்.

மேக்கப்:
தேர்வு செய்யும் ஆடைகளுக்கு ஏற்ப ஹேர் ஸ்டைல், மேக்கப் செய்தாலும் ஐ-மேக்கப்பில் எப்போதும் அதிக கவனம் செலுத்துவேன். எனக்கான பேஸிக் மேக்கப்பை நானே போட்டுக்கொள்வது என்னுடைய இயல்பு. ஷூட் இல்லாத நாள்களில் மேக்கப் இல்லாமல் ஸ்கின்னுக்கு ரெஸ்ட் கொடுப்பேன்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.