மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள்: 8 தொழிலதிபர்கள், 19 பட்டதாரிகள்!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கமல்ஹாசன் இன்று வெளியிட்டார். மக்களவைத் தேர்தல், சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ள சூழலில் திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து, பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக அறிவித்த கமல்ஹாசன், சென்னை தி.நகரில் இன்று (மார்ச் 20) நடைபெற்ற நிகழ்வில் 21 தொகுதிகளுக்கான மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி, நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் மத்திய சென்னை தொகுதியிலும், ஓய்வுபெற்ற ஐஜி மவுரியா வடசென்னை தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். 21 வேட்பாளர்களில் 19 பேர் பட்டதாரிகள் ஆவர். இதில் 3 மருத்துவர்கள், 4 பொறியாளர்கள், 5வழக்கறிஞர்களும், 1 ஓய்வுபெற்ற நீதிபதியும் அடங்கியுள்ளனர். 8 பேர் தொழிலதிபர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் 24ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், மக்களவை தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து அன்றைய தினமே அறிவிக்கப்படும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்த செ.கு.தமிழரசனின் இந்திய குடியரசுக் கட்சிக்கு 1 மக்களவைத் தொகுதியும், 3 சட்டமன்ற தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் விவரம் திருவள்ளூர் - டாக்டர் எம்.லோகரங்கன் சென்னை வடக்கு - ஏஜி மவுரியா மத்திய சென்னை - கமீலா நாசர் ஸ்ரீபெரும்புதூர் - எம்.சிவக்குமார் அரக்கோணம் - என்.ராஜேந்திரன் (தொழிற்துறை பொறியாளர்) வேலூர் - ஆர். சுரேஷ் (தொழிலதிபர்) கிருஷ்ணகிரி - ஸ்ரீகாருண்யா (தொழிலதிபர்) தருமபுரி - வழக்கறிஞர் ராஜசேகர் விழுப்புரம் (தனி) - வழக்கறிஞர் அன்பின் பொய்யாமொழி (நிறுவனர், தலித் முன்னேற்றக் கழகம்) சேலம் - பிரபு மணிகண்டன் நீலகிரி (தனி) - வழக்கறிஞர் ராஜேந்திரன் திண்டுக்கல் - டாக்டர் எஸ்.சுதாகர் திருச்சி - வி.ஆனந்தராஜா (தொழிலதிபர்) சிதம்பரம் (தனி) - டி.ரவி (தொழிலதிபர்) மயிலாடுதுறை - ரிபாஃயுதீன் (தொழிலதிபர்) நாகை (தனி) - கே.குருவையா (ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி) தேனி - ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி - டி.டி.எஸ் பொன்குமரன் (தொழிலதிபர்) நெல்லை - என்.வெண்ணிமலை (தொழிலதிபர்) குமரி - எபிநேசர் (தொழிலதிபர்) புதுச்சேரி - டாக்டர் எம்.ஏ.எஸ் சுப்ரமணியன்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.