கிழக்கில் கல்வியாளர்கள் சமூக உயர் பதவி வகிப்பவர்கள் தமிழ் மக்கள் கூட்டணியுடன் சந்திப்பு!!

வைத்தியர்கள் பொறியியலாளர ஆசிரியர்கள் அதிபர்கள் சமூக நலன் செயற்பாட்டாளர் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி விக்னேஸ்வரன் கொள்கைப் பரப்புப் செயலாளர் அருந்தவபாலன் இணைச்செயலாளர் பேராசிரியர் சிவநாதன் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான செயலாளர் எஸ்.சோமசுந்தரம் வடக்கு கிழக்கு மாகாண இளைஞர்கள் விவகாரங்கள் பொறுப்பாளர் கிருஷ்ணமீனன் இணையம் அரச்சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் தலைவர் எம்.சீலன் மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு கலந்துரையாடிய பெரும்பாலான சமுக ஆர்வலர்கள் சி.வி விக்னேஷ்வரனிடம் பலகுறைபாடுகளை முன் வைத்தனர் குறிப்பாக இது வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைவர்கள் தமது பிரதேச பிரச்சினைகள் குறித்து கரிசனை கொள்வதில்லை என்றும் அவர்கள் அரச சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் கவலை வெளியிட்டுள்ளனர்.

இறுதியாக தற்போது இருப்பவர்கள் மத்தியில் தங்களை தான் நம்பி எமது தமிழ் மக்கள் உள்ளனர் என்றும் சி.வி விக்னேஷ்வரனிடம் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை