மெக்ஸிகோ மக்களின் நம்பிக்கை !

மெக்ஸிகோவின் டியோட்டிஹூக்கன் பகுதியில் உள்ள சூரியனின் பிரமிட்டில் நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை திரண்ட சுற்றுலாப் பயணிகள் தங்களின் கரங்களை மேலே உயர்ந்தி சூரிய நமஸ்காரம் செய்கின்றனர்.


எமது பண்டைய தமிழர் பாரம்பரியமாக இருந்து வருகின்ற சூரிய நமஸ்கார வழிமுறைகள் இன்னமும் மேற்குலக நாடுகளிலும் கடைபிடிக்கப்படுகின்றன.

இரவும் பகலும் சம நேரமுடைய வசந்தகால பருவத்தில் இந்த அதிகாலை சூரிய நமஸ்கார பிராத்தனைகள் ஆரம்பிக்கின்றன.

இதன்போது சூரியனிடமிருந்து கிடைக்கும் கதிர்வீச்சுக்களை ஒருமித்து இந்த வருடம் முழுவதும் சக்தியைத் தரும் வகையில் சேமித்துக் கொள்ள முடியும் என்பது இந்த மக்களின் ஐதீகம்.

இதன்பொருட்டு மெக்ஸிகோவின் வடக்காக அமைந்துள்ள புனித நகரமான டியோட்டிஹூக்கனுக்கு கால்நடையாகவே யாத்திரை சென்று அங்குள்ள சூரியனின் பிரிமிட்டின் மீது ஏறி உள்ளூர்வாசிகளும், சுற்றுலாப் பயணிகளும் வழிபாடு நடத்துகின்றனர்.

இரவும் பகலும் சம நேரமுடைய வசந்தகாலம் மார்ச் மாதத்தின் மத்தியில் ஆரம்பிப்பதுடன், இது வட அரைக்கோளத்தில் வசந்த காலத்தின் தொடக்கத்தை குறிக்கின்றது.

பிரமிட்டின் மேல் பகுதி வரை சென்ற பல உள்ளூர் மக்களும், சர்வதேச ரீதியாக இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளும் மிகுந்த ஆற்றலை பெறுவது போல் உணர்வதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கடந்த கால இன்னல்களை மறந்து, பய பக்தியுடன் தமது பிரார்த்தனைகளை மேற்கொண்டதாக பல வௌிநாட்டவர்கள் தெரிவித்துள்ளனர். டியோட்டிஹூக்கனுக்கு வரும் ‘மனிதர்கள் கடவுள்கள் ஆவார்கள்” என்ற நம்பிக்கை இந்த மக்களிடையே நிலவுகின்றது.

16 ஆம் நூற்றாண்டின் ஸ்பானிய வெற்றிக்கு முன்னர் மெக்சிக்கோவில் வாழ்ந்த அமெரிக்க -இந்திய மக்கள் சமூகமானஅஸ்டெக்குகள், 600 வது பொது சகாப்தத்தில் நகரத்தை கைவிட்ட 700 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த பகுதியில் ஏனைய தரப்பு மக்கள் குடியேறியமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.