மகிந்த அணி வலி.வடக்கில் காணி சுவீகரிப்பு நடவடிக்கையை முடக்கி விட்டுள்ளமை அம்பலம்!!

கடந்த ஆண்டு ஒக்டோபரில் நடந்த 51 நாள் அதிகாரத்தில் இருந்த மகிந்த அணி வலி.வடக்கில் காணி சுவீகரிப்பு நடவடிக்கையை முடக்கி விட்டுள்ளமை இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.


இராணுவத்தினர் நடத்தும் தல்செவன ஹொட்டல், கடற்படையினர் நடத்தும் கார்பர்வியூ ஹொட்டல் என்பவற்றுக்கான காணிகளை சுவீகரித்து பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்குமாறு மகிந்த அணியினர் அழுத்தம் கொடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.

கடந்த ஒக்­ரோ­பர் மாதம் 26ஆம் திகதி அர­சி­யல் சூழ்­சி­யின் ஊடாக ஆட்­சிப்­பீ­ட­மே­றி­ யது மகிந்த அணி. அவர்­க­ளது காலத்­தில், யாழ்ப்­பாண மாவட்­டத்­தி­லுள்ள அரச அலு­வ­ லர்­களை நாடா­ளு­மன்ற துறை­சார் குழுக் கூட்­டங்­க­ளுக்கு அழைத்­துள்­ள­னர்.

கார்­பர் வியூ ஹோட்­ட­லுக்­கு­ரிய காணியை கடற்­ப­டை­யி­ன­ருக்­கும், தல்­செ­வன ஹோட்­ட­லுக்­கு­ரிய காணியை இரா­ணு­வத்­தி­ன­ருக்­கும் வழங்க நட­வ­டிக்கை எடுக்­கு­ மாறு மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுசந்த புஞ்­சி­நி­லமே அழுத்­தம் கொடுத்­ துள்­ளார்.

அதற்­கு­ரிய நட­வ­டிக்­கை­கள் அரச அதி­க­ரி­க­ளால் எடுக்­கப்­பட்­டி­ருக்­காத நிலை­யில், நாடா­ளு­மன்ற துறை­சார் குழுக் கூட்­டத்­துக்கு மாவட்ட அதி­கா­ரி­களை மீள­வும் அழைத்­தார் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுசந்த புஞ்­சி­நி­லமே. காணி­களை பாது­காப்­ புத் தரப்­பி­ன­ருக்கு வழங்க நட­வ­டிக்கை எடுக்­காத அதி­கா­ரி­களை

திட்­டித் தீர்த்து எச்­ச­ரித்­துள்­ளார். இத­னை­ய­டுத்து காணி­களை சுவீ­க­ரிப்பு செய்­வ­தற்கு அரச அதி­கா­ரி­கள் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­னர். ஆயத் திணைக்­க­ளம், உணவு களஞ்­சி­ யம், கே.கே.எஸ். ஆங்­கில மகா­வித்­தி­யா­ல­யம் என்­ப­வற்­றுக்­கும்

மற்­றும் தனி­யார் சில­ ருக்­கும் சொந்­த­மான காணி­க­ளை­யும் உள்­ள­டக்­கியே தல்­செ­ வன ஹோட்­டல் அமைந்­ துள்­ளது. அந்­தக் காணி­க­ளைச் சுவீ­க­ரிப்­ப­தற்­கான ஆரம்­ப­ கட்ட நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. ஏற்­க­னவே திணைக்­க­ளங்­க­ளுக்கு  ஒதுக்­கப்­பட்ட காணி­க­ளாக இருப்­ப­தால்

அவற்றை பாது­காப்பு அமைச்­சுக்கு பாரப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கையை காணி அமைச்சே முன்­னெ­டுக்­க­வேண்­டும். இதற்­கு­ரிய ஆலோ­ச­னை­க­ளைக் கோரி, காணி அமைச்­சுக்கு யாழ்ப்­பாண மாவட்ட அதி­கா­ரி­க­ளால் கடி­தம் அனுப்­பப்­பட்­டுள்­ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.