124 ஏக்கர் பண்ணையைத் தேனீக்களுக்கு அர்ப்பணித்த பிரபல ஹாலிவுட் நடிகர்!

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர், இயக்குநர் எனப் பன்முகத்தன்மையுடைய மோர்கன் ஃப்ரீமேன், தற்போது தேனீக்களின் பாதுகாவலன் என்றும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.


தெ ஷாஷாங் ரெடெம்ப்சன் (The shawshank redemption), செவென், ஒபிலிவியன், லூசி போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களில் நடித்தவர் மோர்கன். இன்விக்டஸ் என்னும் திரைப்படத்தில் நெல்சன் மண்டேலாவாக நடித்து அனைவரின் மனதிலும் இடம்பிடித்தவர். இவர் 2014 ம் ஆண்டிலிருந்து தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். காட்டுத் தேனீக்களை பாதுகாப்பதால் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும் என்று பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில் மோர்கன் மிசிசிப்பி நகரில் உள்ள தன் 124 ஏக்கர் பண்ணையைத் தேனீக்கள் சரணாலயமாக மாற்றியிருக்கிறார். தேனீக்கள் இனத்தைப் பெருக்கும் விதமாக ஆர்கன்சாஸ் பண்ணையிலிருந்து 26 தேனீ ரகங்களைச் சமீபத்தில் இறக்குமதி செய்தார். பண்ணையில் உள்ள தேனீக்களை அன்றாடச் செயல்பாடுகளை எந்த இடர்பாடும் இல்லாமல் மேற்கொள்ள வைக்கிறார். அதுமட்டுமன்றி தேனீக்களிடமிருந்து தேனை எடுப்பதேயில்லை.

இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த மார்கன், ``அழிந்து வரும் தேனீக்களை மீண்டும் இந்தக் கிரகத்திற்குள் கொண்டு வருவதற்கு நம் அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சிகள் வேண்டும். என் பண்ணையில் தேனீக்கள் தேன் எடுக்க ஏற்ற செடிகளை வளர்க்கிறேன். அவற்றுடன் இருந்து தேனை நான் எடுப்பதேயில்லை. தேன் கூடுகள் அமைக்கும் பணிகளை நேர்த்தியாக மேற்கொண்டு வருகிறது. மேலும், என் பண்ணையில் உள்ள தேனீக்கள் என்னை இதுவரை கொட்டியதே இல்லை’’ என்று நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

``அமெரிக்காவில் 2015 - 2016 ஆண்டு இடைவெளியில், தேனீக்களின் எண்ணிக்கை 44 சதவிகிதம் குறைந்துவிட்டதாக ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன. இது ஒரு பேரழிவு. எனவே, என் பண்ணையைத் தேனீக்களின் கூடாக மாற்றினேன்’’ என்றும் தெரிவித்துள்ளார் மார்கன்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.