வடகொரியா-தென்கொரியா பிளவு !!

வடகொரியாவும் தென்கொரியாவும் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதற்காக உருவாக்கப்பட்ட கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரிய அதிகாரிகள் வெளியேறியுள்ளனர்.

வடகொரியாவின் உத்தரவை தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) அந்நாட்டு அதிகாரிகள் வெளியேறுவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
எதிரி நாடுகளாக செயற்பட்டு வந்த தென்கொரியாவும் வடகொரியாவும் கடந்த ஆண்டு சமாதானமடைந்த நிலையில் இருநாட்டு அதிகாரிகளும் கலந்துரையாட வடகொரிய எல்லையில் கூட்டுறவு அலுவலகம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அத்தோடு இருநாட்டு தலைவர்களும் நேரடியாக பேசுவதற்கு தொலைபேசி சேவைகளும் ஏற்படுத்தப்பட்டது. எனினும் தற்போது குறித்த அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியுள்ளது.
அமெரிக்க- வடகொரிய நாடுகளின் வியட்நாம் பேச்சுவார்த்தைக்கு பின்னர் வடகொரிய தலைவர் அதிரடி முடிவுகளை எடுத்து வரும் நிலையில் மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரிய தீபகற்பத்தில் இருந்து பொருளாதார தடைகளை நீக்கும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதியை வடகொரிய தலைவர் சந்தித்த நிலையில் அது தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து அமரிக்க- வடகொரிய நாடுக்களுக்கிடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.